ப்ரபஞ்சத்திற்கே நன்றி, தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை

By subhashini · 2/8/2025

தேசிய விருது வாங்கியது பற்றி ஜி.வி பிரகாஷ் வெளியிட்டும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 71 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது. இன்று 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசிலக்கப்பட்டு இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட படங்களுக்கு தான் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பார்க்கிங் படம் பிடித்து இருக்கிறது. அதோடு பார்க்கிங் படம் சிறந்த திரைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. பின் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் எம்.எஸ் பாஸ்கர் பெற்றிருக்கிறார். மொத்தம் மூன்று விருதுகளை பார்க்கிங் படம் பெற்று இருக்கிறது. சிறந்த நடிகராக ஜவான் படத்திற்காக ஷாருக்கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

71வது தேசிய விருது:

35 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஷாருக்கானுக்கு இதுதான் முதல் முறைதேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த படமாக 12th பைல் படம் தேர்வு செய்யப்படுகிறது. சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வாகி இருக்கிறார். மேலும், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தின் பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி பிரகாஷ் பெற்றிருக்கிறார். இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்தது வாத்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது:

இந்நிலையில் இது தொடர்பாக ஜி.வி பிரகாஷ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், இரண்டாவது முறை வந்த ஆசிர்வாதம். 71 வது தேசிய திரைப்பட விருதில் வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்திருப்பதில் நெஞ்சார்ந்த நன்றியையும் பெருமகிழ்ச்சியையும் அடைந்திருக்கிறேன். மதிப்பிற்குரிய ஜூரிக்கும் தேர்வு குழுவினருக்கும் என்னுடைய இதயம் பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.வி.பிரகாஷ் அறிக்கை:

இந்த அழகான பயணத்தில் என்னுடன் இருந்த வாத்தி பட குழுவினர் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. இந்த படத்திற்காக என்னை தேர்வு செய்த சகோதரர் தனுஷுக்கும் நன்றி. பொல்லாதவன் முதல் அசுரன், வாத்தி, இட்லி கடை என்று நாங்கள் தொடர்ச்சியாக இணைந்து வேலை செய்கிறோம். எங்கள் இருவருக்குமே படைப்பாற்றல் நிறைவைத் தருவதாகவும், பலனளிக்கும் அனுபவமாகவும் இருந்து வருகிறது. என்னுடைய இயக்குனர் வெங்கி அட்லூரிக்கி பெரிய நன்றி.

நன்றி சொன்ன ஜி.வி.பிரகாஷ்:

அவர்தான் என்னுடைய சிறந்த இசையை வெளிக்கொண்டுவர எனக்கு உறுதுணையாக இருந்தார். இந்த படத்தின் இசைக்காக என்னை நம்பினார். வாத்தி முதல் லக்கி பாஸ்கர் வரை இப்போது எங்கள் அடுத்த படத்திற்கும் தொடர்ந்து நம்பிக்கை வைப்பதற்கும் நமது பயணத்தில் பிளாக் பாஸ்டர் தருணங்களை ஏற்படுவதற்கும் நன்றி வெங்கி. தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதை அடுத்து என்னுடைய குடும்பம், இசை கலைஞர்கள் குழு, பாடல் ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என என்னை நம்பியதற்கும் ஆதரவளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரபஞ்சத்திற்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full