விவாகரத்துக்கு பின் நடிகையோடு டேட்டிங்காக? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ்

By subhashini · 20/2/2025

தன்னுடைய விவாகரத்து தொடர்பாக பரவும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி.வி பிரகாஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஜி.வி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து குறித்த செய்தி தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் எனபல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜி.வி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அதன் பின் ஹீரோவாக இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.

ஜி.வி பிரகாஷ் திரைப்பயணம்:

தற்போது ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கிங்ஸ்டன். இந்த படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் கீழ் ஜி.வி பிரகாஷ் தயாரித்திருக்கிறார். கமல் பிரகாஷ் தான் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் உடன் திவ்யபாரதி நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே பேச்சுலர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் சார்ந்த கதைக்களத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஜி.வி பிரகாஷினுடைய 25 வது படம் ஆகும்.

திவ்யபாரதி பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பிரமோஷனுக்காக ஜி.வி.பிரகாஷும், திவ்யபாரதியும் சேர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்கள். அதில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து குறித்து நடிகை திவ்யபாரதி, ஜி.வி பிரகாஷ் விவாகரத்துக்கு நான்தான் காரணம் என்று சொன்னார்கள். பல பேர் என்னை விமர்சித்து இருந்தார்கள். இவர்களுடைய விவாகரத்திற்கு மக்கள் எல்லோருமே என் மீது தான் கோபப்பட்டார்கள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று கூட தெரியவில்லை. யார் என்ன பண்ணாலும் கடைசியில் ஒரு பொண்ணோட கேரக்டரை தான் கேள்விக்குறி ஆக்குகிறார்கள். அது ஏன் என்றும் புரியவில்லை.

https://www.youtube.com/watch?v=_cLSvFbZIi4

ஜி.வி பிரகாஷ் பேட்டி:

இதெல்லாம் எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். உடனே குறிப்பிட்ட ஜி.வி. பிரகாஷ், இப்போ கூட நாங்கள் ரெண்டு பேரும் டேட் பண்ணி கொண்டு இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் இல்லை. நாங்கள் இரண்டு பேருமே நல்ல நண்பர்கள், அவ்வளவுதான். நாங்கள் இவங்களை சூட்டிங் முடித்து ரொம்ப நாள் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன். ஒருவேளை நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து நடித்த படம், அதோட போஸ்டர்ஸ், பாட்டு சீன்ஸ் எல்லாம் அவர்களை அப்படி யோசிக்க வைத்திருக்கிறோம். அது மக்களோட சிந்தனை. அதை நாம் ஒன்னும் பண்ண முடியாது. ஆனால், நாங்கள் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் ஒன்றும் இல்லை.

ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி:

எனக்கும் சைந்தவிக்கும் விவாகரத்து ஆகியிருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கும்போது இருந்தே நல்ல நண்பர்கள். அந்த நட்பு இன்றும் எங்கள் இடையில் இருக்கிறது. நாங்கள் இரண்டு பேரும் தொழில் ரீதியாக இன்றும் ஒன்றாக தான் சேர்ந்து வேலை செய்கிறோம். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும், ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்கள். திருமணம் ஆகி 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. பின் திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர். இவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்று தெரியவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full