'அண்ணா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு', உதவி கேட்ட ரசிகரை மிரளவைத்த ஜி. வி. பிரகாஷ்

By ·

தன்னிடம் உதவி கேட்ட ரசிகருக்கு ஜி. வி. பிரகாஷ் செய்திருக்கும் உதவி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ஜி. வி. பிரகாஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், பாடகர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இவர் 'ஜென்டில்மேன்' என்ற திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமாகி இருந்தார். பின், முதல் முதலாக 'வெயில்' என்ற படத்தில் இசையமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைத்திருக்கிறார்.

ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பாளராக:

இவர் ஓரம் போ, பொல்லாதவன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், மயக்கம் என்ன, தாண்டவம், ராஜா ராணி, அசுரன், சூரரைப் போற்று, கேப்டன் மில்லர் போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். குறிப்பாக இவர் இசை அமைத்த 'சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கலான்:

தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வெளியாக இருக்கும் 'தங்கலான்' திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மறுபக்கம் சினிமாவில் ஹீரோவாகவும் ஜி. வி. பிரகாஷ் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுவும் இவர் நடித்து வெளியாகிய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சுலர் ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

ரசிகர் கேட்ட உதவி:

ஆனால் சமீப காலமாக ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ஜெயில், செல்பி, அடியே, கள்வன் போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், ஜி. வி. பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் 'நீக்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிற்கு ரிப்ளை செய்யும் வகையில் ரசிகர் ஒருவர், 'அண்ணா நாலு நாளா சரியா சாப்பிடாம நானும் எனது மனைவியும் இருக்கிறோம். உங்ககிட்ட 500 ரூபாய் இருந்தா G Pay பண்ணுங்க ப்ளீஸ்' என்று பதிவிட்டு இருந்தார்.

ஜி. வி. பிரகாஷ் செய்த உதவி:

ரசிகரின் பதிவை பார்த்த ஜி. வி. பிரகாஷ் உடனே ரிப்ளை செய்துள்ளார். அதாவது அந்த ரசிகரிடம், 'உங்களின் G Pay நம்பரை அனுப்புங்கள்' என்று பதிவிட்டார். அதற்கு அந்த ரசிகர் அவருடைய நண்பரை அனுப்பி, 'ப்ளீஸ் அண்ணா' என்று மீண்டும் உதவி கேட்டிருந்தார். அதைப் பார்த்த ஜி. வி. பிரகாஷ், 'அந்த ரசிகருக்கு 2500 ரூபாய் அனுப்பி, நல்லா சாப்பிடுங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்' என்று பதிவிட்டுள்ளார். தற்போது ஜி. வி. பிரகாஷ் செய்த இந்த உதவிதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை