ஹாலிவுட் ரேஞ்சுக்கு வெளிவந்த 'கிங்ஸ்டன்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? இத எதிர்பார்க்கல
கிங்ஸ்டன் படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார்.
இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதன் பின் இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமானார். அதன் பின்னர் படங்களில் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
கிங்ஸ்டன் படம்:
தற்போது இவருடைய 25 படமாக கிங்ஸ்டன் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஜி.வி பிரகாஷ் தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் திவ்யபாரதி, குமரவேல், ஆண்டனி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். திகில் கலந்த ஃபேண்டஸி பாணியில் உருவாகியிருக்கும் இருந்த படம் நேற்று தான் வெளியாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் கிங்ஸ்டன் படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, படம் வெளியாகி முதல் நாளில் 90 லட்சம் மட்டும் தான் வசூல் செய்திருக்கிறது.
முதல் நாள் வசூல்:
எதிர்பார்த்ததை விட குறைவாக முதல் நாள் வசூல் செய்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது ஜிவி பிரகாஷினுடைய 25 வது படம்என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் ஓடவில்லை.இனி வரும் நாட்களில் ஆவது இந்த படத்தினுடைய வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். படத்தில் தூவத்தூரில் கடல் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கப் போனாளே இறந்து பிணமாக தான் திரும்பி வருகிறார்கள். தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் அந்த கிராமத்தில் உள்ள எல்லோருமே மீன்பிடிக்க செல்ல பயப்படுகிறார்கள்.
கதைக்களம்:
இந்த சம்பவம் 1982ல் நடக்கிறது. இதனால் அரசாங்கம் கடலுக்குள் இனி யாரும் மீன் பிடிக்கப் போகக்கூடாது என்று உத்தரவும் போடுகிறது. அதோடு இந்த சம்பவத்திற்கு காரணம் கடலில் அடக்கம் செய்யப்படும் ஆன்மாக்களின் வேலை தான் என்று கிராம மக்களும் பயப்படுகிறார்கள்.பல ஆண்டுகள் இப்படியே நடப்பதால் கடலுக்குள் செல்ல மக்கள் பயப்படுகிறார்கள். இந்த சமயத்தில் தான் கதாநாயகன் ஜி.வி பிரகாஷ் என்ட்ரி கொடுக்கிறார். பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து வாழுகிறார் ஜி.வி பிரகாஷ். பணத்தை எப்படியாவது சேர்த்து ஒரு போர்ட் வாங்க வேண்டும் தான் இவருடைய லட்சியமே. இதனால் இவர் கடலுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார்.
படத்தின் கதை:
இதற்காக இவர் தாமஸ் என்பவரிடமும் வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய முதலாளி போதைப்பொருள் கடத்துகிறார் என்று தெரிந்து கொண்டு ஜி.வி பிரகாஷ் அவரிடம் இருந்து விலகுகிறார்.
அதற்குப்பின் ஜிவி பிரகாஷ் துணிச்சலாக கடலுக்கு செல்கிறார். கடலுக்கு போனால் உயிருடன் மீண்டும் திரும்ப முடியாது என தெரிந்தோமே தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஜி.வி பிரகாஷ் கடலுக்கு செல்கிறார். மக்கள் சொல்லும் கதை உண்மை இல்லை என்று நிரூபிக்கவும் நினைக்கிறார். கடைசியில் கடலுக்கு சென்ற ஜி.வி பிரகாஷ் திரும்பி வந்தாரா? கடலுக்குள் என்ன நடக்கிறது? மக்கள் நம்புவது போல் ஆன்மாக்களின் வேலையா? இல்லையா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.