2019 மக்களவைத் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் நாட்டின் பிரதமரான மோடி தேர்தல் பிரச்சாரத்தை ட்விட்டரில் தொடங்கிவிட்டார். இதனால் சமீபத்தில் தனது பெயரை நானும் ‘தேசியத்தின் பாதுகாவலன்’ என்று ட்விட்டரில் தனது பெயரை மாற்றியுள்ளார் பிரதமர் மோடி. இதனால் சமூக வலைதளத்தில் இந்த செய்தி மிகவும் வைரல் ஆனது.

அவரைத் தொடர்ந்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ச வர்த்தன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார்(காவலாளி) என்ற பெயரை சேர்த்தனர். அவ்வளவு ஏன் தமிழிசை சௌந்தர்ராஜன் கூட தனது பெயரை மாற்றியிருந்தார்.
இதற்கு நாடு முழுக்க வரவேற்பும் நக்கல்களும் கிளம்பின.

Advertisement

இந்த நிலையில் ஜிவி பிரகாஷு, விஜய் இயக்கத்தில் நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படம் வெளியாக உள்ளது. ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் ஸ்டைலாகப் போஸ் கொடுக்கும்  நாய் ஒன்று  ‘நானும் காவலாளிதான்’ என்று சொல்வது போல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டதா அல்லது ரசிகர்கள் உருவாக்கியதா என்ற விபரம் தெரியவில்லை. இந்த போஸ்டர் தற்போது பா ஜ க உறுப்பினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement