ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு: நீதிமன்ற அளித்த அதிரடி தீர்ப்பு - என்ன தெரியுமா?

By subhashini · 30/9/2025

ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து வழக்கு தொடர்பாக நீதிபதி அளித்திருக்கும் தீர்ப்பு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஜி.வி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து குறித்த செய்தி தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜி.வி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அதன் பின் ஹீரோவாக இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.

ஜி.வி பிரகாஷ் திரைப்பயணம்:

தற்போது ஜி.வி பிரகாஷ் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்கள். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கடந்த 2020 ஆம் ஆண்டு தான் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின் திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர். இவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்று தெரியவில்லை. இது பலருக்கும் பேரதிர்ச்சி தான்.

https://www.youtube.com/watch?v=LxHfUWPU1DE

ஜி வி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து:

இவர்களின் விவாகரத்து பற்றி பல வதந்திகள் இணையத்தில் வைரலாகி இருந்தது. மேலும், பிரிவுக்கு பின் இவர்கள் இருவரும் ஒன்றாக பணியாற்றுவது அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. இவர்கள் இருவருமே முறையாக விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதமே மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆறு மாத காலம் அவகாசம் கொடுத்தது. அதற்கு பிறகும் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விருப்பமில்லை, பிரிந்து வாழ்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=6cQBE0aTPYs

நீதிபதி தீர்ப்பு:

அதற்குப்பின் கடந்த வாரம் நீதிமன்றத்தில் குழந்தையை கவனித்துக் கொள்வது தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜிவி பிரகாஷ், என்னுடைய மகள் சைந்தவி இடமே வளரட்டும். எனக்கு அதில் ஆட்சியபனை இல்லை என்று கூறியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து தொடர்பான வழக்கு நடந்திருக்கிறது. அதில் நீதிபதி, இருவருக்குமே விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full