கலாட்டா காதல் பாணியில் வெளிவந்த 'ஹேப்பி ராஜ்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 27/3/2026

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜி.வி. பிரகாஷ். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹேப்பி ராஜ். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியான், மதுரை முத்து, கீதா கைலாசம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோவின் தந்தை ஜார்ஜ் மரியானை ஊரே கிண்டல் கேலி செய்து ரொம்பவே அவமானம் செய்கிறார்கள். குதிரை முட்டை போன்ற பெயர்களை வைத்து உருவ கேலியெல்லாம் செய்கிறார்கள். இதனால் ஜார்ஜ் மரியான் தனக்கு பிறக்கும் குழந்தைக்கு ஹேப்பி என்ற ஆனந்த் ராஜ் என்ற பெயரை வைத்து ராஜா போல வளர்க்கிறார். ஹீரோ ஜி.வி பிரகாஷ் பல வருடங்களுக்கு பிறகு பிறந்த மகன் என்பதால் ரொம்பவே அதிகமாக பாசம் வைத்திருக்கிறார்.

ஜார்ஜ், ஜிவி பிரகாஷை பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்க்கிறார். இருந்தாலும் தன்னுடைய தந்தையின் தோற்றத்தை பற்றிய உருவ கேலி மூலமாக ஜி.வி. பிரகாஷ் பாதிக்கப்படுகிறார். இதனால் அவர் தந்தையை விட்டு விலகிச் செல்ல முடிவெடுத்து பெங்களூரில் வேலைக்கு செல்கிறார். அங்கு வேலை செய்யும் இடத்தில் ஹீரோயினி ஸ்ரீ கௌரி பிரியாவை ஜிவி பிரகாஷ் காதலிக்கிறார். அப்பாஸினுடைய மகள் தான் ஸ்ரீ கௌரிப்பிரியா.

அப்பாஸ் மிகப் பெரிய பணக்காரர். இருந்தாலும் தன் மகள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிடுகிறார். பின் பெங்களூரில் ஒன்று கூடி திருமண பேச்சுவார்த்தையை தொடங்குகிறார்கள். ஆரம்பத்திலேயே ஜார்ஜ் மரியான்- அப்பாஸ் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால் திருமணம் நின்று போகிறது. கடைசியில் ஜி.வி பிரகாஷ், ஸ்ரீ கௌரி பிரியா திருமண நடந்ததா? அப்பாஸ்- ஜார்ஜ் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனை? என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தில் நாயகன் ஜி.வி பிரகாஷ் தன்னுடைய துள்ளலான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். காதல், கலாட்டா, ஆக்சன் என அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார். தந்தை- மாமனார் இடையே சிக்கித் தவிக்கும் காட்சிகள் எல்லாம் பாராட்டைப் பெற்றிருக்கிறது. இவரை அடுத்து படத்தில் தந்தையாக நடித்திருக்கும் ஜார்ஜ் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது. மகனின் அன்புக்காக ஏங்கும் ஒரு தந்தையின் பாசத்தை நடிப்பின் மூலம் கண் முன்னே கொடுத்திருப்பது மிகப்பெரிய விஷயம்.

இவருடைய எதார்த்தமான நடிப்பு கதைக்கு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறது. பல இடங்களில் இவருடைய உணர்வுபூர்வமான காட்சிகள் பார்வையாளர்களுமே கண்கலங்க வைத்திருக்கிறது. மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு அப்பாஸ் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் ஸ்ரீ கௌரி பிரியா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். தந்தை- மகன் உறவை மையமாக வைத்து இயக்குனர் படத்தை எடுத்திருந்தாலும் சமூகத்தில் நடக்கும் உருவ கேலி, யாரும் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை என்ற ஒரு ஆழமான கருத்தையும் சொல்லி இருக்கிறார்.

படத்தின் காமெடிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகளை இயக்குனர் சுவாரசியமாகவும் நேர்த்தியாகவும் கொண்டு சென்றிருப்பது பாராட்டுகுரிய விஷயம். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருக்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் குடும்பத்துடன் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் ஹேப்பி ராஜ் இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் நடிப்பு

கதைக்களம் அருமை

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

கிளைமாக்ஸ் சூப்பர்

சமூகத்திற்கு நல்ல மெசேஜ்

குறை:

ஆகாங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மற்றபடி படத்தில் பெரிதாக குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் ஹேப்பி ராஜ் - டக்கர்

behindtalkies AMP · Quick view
View full