ஜோவிகா எதுக்கு அங்க போறா - Mr.இந்தியா மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு.

By Ajju · 12/3/2024

பிரபல ஜிம் டிரைனர் மணிக்கும்- பிக் பாஸ் பிரபலம் ஜோவிகாவிற்கும் இடையே இருக்கும் உறவு குறித்து தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. பிரபலமான ஜிம் ட்ரைனராக இருப்பவர் மணி. இவருடைய ஜிம்மில் சினிமா பிரபலங்கள் பலருமே ஒர்க்வுட் செய்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ட்ரெயினர் மணியின் மீது அவருடைய காதலி சந்தியா புகார் கொடுத்து இருந்தார்.

View this post on Instagram

A post shared by S A N D I A (@sandiadia_)

இது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் youtube சேனலுக்கும் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர், ஜிம் ட்ரைனர் மணி நிறைய பெண்களை ஏமாற்றி இருக்கிறார். அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இதை அறிந்து நான் தட்டிக் கேட்டபோது அவர் உடல் ரீதியாக என்னை காயப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக என்னிடம் நிறைய ஆதாரங்களும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

ஜிம் ட்ரைனர் மணி குறித்த சர்ச்சை:

இப்படி இவர் அளித்திருந்த பேட்டி சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இவர் மட்டுமில்லாமல் ஜிம் ட்ரைனர் மணியின் முன்னாள் மனைவி கவிதாவும் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார். அதில் அவர், மணி தன்னுடைய ஜிம்முக்கு வரும் பெண்களிடம் ஆசை வார்த்தையாக பேசி ஏமாற்றி இருக்கிறார். இதை நான் தட்டிக் கேட்டதால் பல வருடங்களாக என்னை அவர் அடித்து துன்புறுத்தி இருந்தார். மணியுடைய ஜிம்முக்கு சினிமா பிரபலங்கள் வருவது வழக்கம்.

வீடியோவில் 17 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=VEeloD6k1JQ

மணி செய்யும் வேலை:

அப்படி வரும் பெண்களிடம் இவர் பேசி அவருக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார். அதோடு அவர்களிடமிருந்து பணத்தையும் ஏமாற்றி பறிப்பது தான் மணி உடைய வேலையே. மேலும், மணிக்கு பிக் பாஸ் பிரபலம் ஒருவரோடு தொடர்பு இருக்கிறது. ஒருமுறை அந்த பிக் பாஸ் பிரபத்தினுடைய கம்பல் அவர்களுடைய பெட்ரூமில் இருந்திருக்கிறது. அதை கேட்டபோது தான் என்னை அவர் பயங்கரமாக அடித்து துன்புறுத்தி இருந்தார். அதற்குப் பின் தான் அந்த பிக் பாஸ் பிரபலம் மணியை விட்டு விலகி விட்டார்.

ஜோவிகா குறித்து சொன்னது:

அவருடைய பெயரை சொல்லி அவருடைய சொந்த வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. இதை சொல்வதற்கு காரணம் மணி உடைய ஜிம்முக்கு வரும் பெண்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாக்கவும் இருக்கும் நோக்கில் தான் சொல்கிறோம். அதுமட்டுமில்லாமல் மணி உடைய ஜிம்மிற்கு பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா சென்று கொண்டிருக்கின்றார். ஜோவிகாவை தனியாக அந்த ஜிம்முக்கு அனுப்பாதீர்கள் என்றும் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Josh Talks தமிழ் (@joshtalkstamil)

வனிதா மகள் ஜோவிகா:

இப்படி இவர்கள் அளித்திருக்கும் பேட்டியை அடுத்து வனிதாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருப்பவர் வனிதா. இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா அவர்கள் சினிமா படங்கள், நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என்று பிசியாக இருக்கிறார். அதேபோல் இவருடைய மகள் ஜோவிகா கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full