நான் விஜயை எப்போதும் விமர்சித்தது இல்லை - எச் ராஜா சொன்ன அடடே விளக்கம்
நடிகர் விஜயை பற்றி பற்றி எச். ராஜா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என்று எழுந்த கருத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் பதில் அளித்திருந்தார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சிக்கு பெயர் வைத்ததிலிருந்து ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். மேலும், சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்க விட்டு ஒத்திகை பார்த்து இருந்தார்.
விஜய் அரசியல்:
பின் சமீபத்தில் விஜய், 250- 300 பேரை மட்டும் வைத்து தன்னுடைய கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை ஏற்றியிருந்தார். கொடியை ஏற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி கொடியை ஏற்றி இருந்தார். அந்த கொடியில் வாகை மலரும், இரு பக்கம் யானை படமும் இடம் பெற்றிருக்கிறது. பலரும் விஜய்யின் கட்சி கொடியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.
மாநாடு குறித்த தகவல்:
தற்போது மாநாட்டிற்கான வேலையை தான் ஆனந்த் தொடங்கி இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தான் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய முதல் மாநாடு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் டி.எஸ்.பியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் அனுமதி கேட்டு மனு கொடுத்து இருக்கிறார். அதில் முதல் மாநாடு செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
"நான் விஜய்யை விமர்சித்தேன் என்று சொல்வது பொய்... இதுவரை நான் அவரை விமர்சித்ததே இல்லை" - ஹெச்.ராஜா#Coimbatore | #HRaja | #BJP | #ActorVijay | #TVK | #TVKPresident | #MersalMovie | #PolimerNews pic.twitter.com/BEWWaAW0Xe
— Polimer News (@polimernews) August 30, 2024
எச்.ராஜா பேட்டி:
இப்படி விஜய் அரசியலுக்கு வந்தார் என்பதில் இருந்தே மற்ற அரசியல் தலைவர்களுக்கு கதி கலக்கி விட்டது. சிலர் விஜய் குறித்து விமர்சித்தாலும், தற்போது சிலர் அவருக்கு ஆதரவாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் எச். ராஜா, நான் விஜயை விமர்சித்தேன் என்று சொல்வது சுத்தமான பொய். நான் அவர் விமர்சிக்கவே இல்லை. விஜய் நடித்த மெர்சல் படத்தில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் தான் பொய் என்று சொன்னேன். அந்த படத்தில் இலவச கல்வி, இலவச மருத்துவம் இல்லை என்று சொல்லியிருந்தார்கள்.
விஜய் குறித்து சொன்னது:
தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை இல்லையா? அவர்கள் சொன்ன விஷயத்திற்கு தான் விமர்சித்து பேசி இருந்தோமே தவிர விஜயை விமர்சித்து பேசவில்லை. அவர் அரசியலுக்கு வந்ததற்கு நாங்களும் வரவேற்றோம். 18 வயது நிரம்பிய யாராக இருந்தாலும் மக்கள் பணி செய்ய உரிமை இருக்கிறது. விஜய் அரசியல் வந்ததற்கு நாங்களே அவருக்கு வெல்கம் பண்ணி இருந்தோம் என்று கூறியிருந்தார். தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். வருகிற செப்டம்பர் ஐந்தாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்கிறார். இதுதான் இவருடைய கடைசி படம்.