பெரியார் சிலை கருத்து நான் கூறவில்லை ! எச்.ராஜா விளக்கம்

By Ajju · 7/3/2018
திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நேற்றுமட்டும் கம்யூனிச தலைவரான லெனின் சிலை உடைத்து எறியப்பட்டது. இந்நிலையில் ஹெச்.ராஜா தமிழகத்திலும் விரைவில் பெரியார் சிலை தகர்த்தெறியப்படும் என்று சமூகவலைத்தளமான டிவீட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜாவின் இந்த கருத்திற்கு தமிழகம் முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.விவகாரம் இவ்வளவு விபரீதமானதை தொடர்ந்து ஹெச்.ராஜா சத்தமில்லாமல் தனது பதிவை அழித்துவிட்டார்.இந்நிலையில் ஹெச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்றைய கருத்து குறித்து கூறியிருப்பதாவது:- நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் பெரியார் அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு பேஸ்புக் அட்மின் என் அனுமதி இன்றி பதிந்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன். கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது என்று அதில் கூறியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full