இஸ்லாமியர் குடும்ப கதை பாணியில் வந்த ஹபீபி படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

ஹபீபி படம் விமர்சனம்

By subhashini · 12/6/2026

இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஹபீபி. இந்த படத்தை நேசம் என்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கஸ்தூரிராஜா, ஈசா, அனஸ்ரேயாராஜன், தனஸ்ரீசுதாகரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சி எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

இந்த படம் முழுக்க முழுக்க 1980களில் வசிக்கும் இஸ்லாமிய குடும்ப பின்னணியில் நிகழும் கதை. படத்தில்

கஸ்தூரிராஜா அவர் தம்பியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவர்கள் நெசவு தொழில் செய்கிறார்கள். நாளைடைவில் விசைத்தறி காரணமாக இவர்களுடைய நெசவுத்தொழில் ரொம்பவே பாதிப்படைகிறது. இதனால் கஸ்தூரிராஜாவுடைய தம்பி வெளிநாடான ரியாத்துக்கு வேலைக்கு செல்கிறார்.

கஸ்தூரிராஜா மகன் ஈஷா, உள்ளூரிலேயே காதல், ஊர் பாசம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்.

சூழ்நிலை காரணமாக கஸ்தூரிராஜாவின் மகனும் வெளிநாடு செல்கிறான். இதனால் அந்த குடும்பம் ஓரளவு வசதி ஆகிறது. ஊர் திரும்பிய ஈஸாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றது. அப்போது ஏகப்பட்ட தடைகள் குடும்ப பிரச்சனைகள் என்றெல்லாம் வருகிறது. அதோடு ஈஸா ஏற்கனவே காதலித்து இருக்கிறார். இறுதியில் ஈஷாவுடைய திருமணம் நடந்ததா? அவர் மீண்டும் வெளிநாடு சென்றாரா? ஈசாவுடைய முன்னாள் காதலி என்ன ஆனார்? மீண்டும் இவர்கள் தங்களுடைய நெசவுத் தொழிலையே செய்ய ஆரம்பித்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

படத்தில் குடும்பத்தலைவர் யூசப் கதாபாத்திரத்தில் கஸ்தூரி ராஜா மொத்த கதையும் சுமந்து சென்றிருக்கிறார் என்றே சொல்லலாம். வீட்டில் தறி வைத்து லுங்கி தயாரிக்கிறார்கள். அவருடைய குடும்ப பிரச்சனைகள், தம்பி, மகனுக்காக அவர் கலங்கி நிற்கும் காட்சி என அனைத்துமே நன்றாக இருக்கிறது.

மேலும், படத்தில் ஹீரோவாக வரும் புதுமுக நடிகர் ஈஷா டீன்ஏஜ் பையனாக சுற்றிக் கொண்டிருக்கிறார். காதல், குறும்புகள், அட்டகாசம் என்று சுற்றி திரிந்தாலும் குடும்பத்திற்காக இவர் வெளிநாடு சென்று கஷ்டப்படும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்குனர் அழுத்தமாக சொல்லி இருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. பெண்களின் உணர்வுகள், கோபம், பாசம் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்க்கும்போது நம் குடும்பத்தில் நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போலவே இருக்கிறது. நிறைய எமோஷனல் காட்சிகள் எல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் கண்கலங்க வைத்திருக்கிறது. குறிப்பாக, இந்த படத்தில் பெண் உரிமையை பற்றி பேசி இருக்கும் இடம் நன்றாக இருக்கிறது.

நடிகர்கள் எதார்த்தமாக செயற்கை தனம் இல்லாமல் நடித்திருப்பது தான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். இந்த படத்தில் புதுமுக நடிகர்கள் நிறைய இருந்தாலும் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியையும் ஒளிப்பதிவாளர் அழகாக காண்பித்திருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து பார்க்கும் படமாக தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இஸ்லாமிய குடும்ப கதை சொல்லி இருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

நிறை:

நடிகர்கள் நடிப்பு சூப்பர்

கதைக்களம் அருமை

கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்

சமூகத்திற்கு நல்ல மெசேஜ்

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்.

சில காட்சிகள் பொறுமையாக நகர்கிறது

மற்றபடி படத்தில் குறைகள் பெரிதாக இல்லை

மொத்தத்தில் ஹபீபி - அழுத்தமான உணர்வு

Tamil Behind Talkies AMP · Quick view
View full