அவ்வோளோ கொளுத்தும் வெயிலில் அமலா பால் செய்த வேலை- மேக்கப் கலைஞர் சொன்ன பகிர் தகவல்

By subhashini · 1/7/2024

நடிகை அமலா பால் மீது மேக்கப் கலைஞர் கூறி இருக்கும் குற்றசாட்டு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பொதுவாகவே சினிமாவில் நடிகர், நடிகைகள் அழகாக தெரிவதற்கு மேக்கப் கலைஞர்கள் மற்றும் சிகை அலங்கார நிபுணர்கள் தான் முக்கிய காரணம். கதைக்கேற்றவாறு அவர்களை அழகாக காண்பிக்கிறார்கள். இதனால் தான் அவர்கள் மக்கள் மத்தியிலும் எளிதாக இடம் பெறுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒப்பனைக் கலைஞர்களுக்கு சரியான மரியாதையும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் நடிகை அமலாபால் ஒப்பனை கலைஞரிடம் மோசமாக நடந்து இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பிரபல சிகை அலங்கார நிபுணர் ஹேமா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், அமலாபாலுடன் சென்னையில் நடந்த படப்பிடிப்புக்கு ஒருமுறை சென்றிருந்தேன்.

சிகை அலங்கார நிபுணர் ஹேமா பேட்டி:

நண்பர் ஒருவர் மூலம் தான் அவருடைய அறிமுகம் கிடைத்தது. அந்த படப்பிடிப்பு ஏப்ரல், மே மாதம் நடந்தது. அப்போ ரொம்ப வெயில். நிழலுக்கு ஒதுங்க ஒரு மரம் கூட கிடையாது. இதனால் நாங்கள் வேனிட்டி வேனில் ஏறினோம். வேனில் இரண்டு பிரிவுகள் இருந்தது. ஒன்று கலைஞர்கள் இருக்கும் இடம், இன்னொன்று தொழில்நுட்ப கலைஞர்கள். அதனால் உள்ளே நுழைந்து நாங்கள் அமர்ந்தோம்.

அமலா பால் செய்த வேலை:

அப்போது அங்கிருந்த அமலா பால், வேனில் அவர்களுக்கு அனுமதி இல்லை. அவர்களை வெளியே போகச் சொல்லுங்கள் என்று மேனேஜரிடம் சொல்லியிருந்தார். மேனேஜர் எங்களிடம் சொன்னதும் நாங்கள் என்ன செய்வதென்று புரியவில்லை. அவ்வளவு வெயில் அடிக்கும் போது நாங்க எங்க போவது? எங்கு இருப்பது? என்று யோசித்தோம். எங்கள் சூழ்நிலை சொல்லியும் புரிந்து கொள்ளாமல் வேனில் இருந்து இறக்கி விட்டார்கள்.

மேக்கப் கலைஞர்கள் நிலைமை:

தென்னிந்திய சினிமாவில் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்று தெரியவில்லை. வேனுக்குள் ஹேர் ஸ்டைலிஸ்ட், ஒப்பனை கலைஞர்களுக்கான அனுமதி கிடையாது என்று விதி எல்லாம் போட்டிருக்கிறார்கள். எதற்கு என்று புரியவில்லை. எங்களுக்கான அங்கீகாரமும் மரியாதையும் கொடுப்பதில்லை. எங்களுடைய வேலையை புரிந்து கொண்டு பாராட்டுவதும் கிடையாது. ஆனால், சில நடிகர்கள் எங்களை புரிந்து கொண்டு மரியாதை தருகிறார்கள் .

நெட்டிசன்கள் கண்டனம்:

அந்த வகையில் பாலிவுட் நடிகை தபுவிடம் நான் பணிபுரிந்து இருக்கிறேன். அவர் நன்றாக நடத்துவார். எங்களுக்கான மரியாதையும் கொடுப்பார். இந்த மாதிரியான நிலை தென்னிந்தியாவில் நிறைய இடத்தில் நடக்கிறது என்ற வேதனையுடன் கூறியிருந்தார். இந்த தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் அமலாபாலை விமர்சித்தும் திட்டியும் வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full