சமீபத்தில் திருமணமான ஹன்சிகா வீட்டில் வந்திறங்கிய பேரிடி - வீட்டிற்கு வந்த Divorce நோட்டீஸ். யாருக்கு தெரியுமா ?

By Manikandan · 15/12/2022

தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு என்று மக்களால் அழைக்கப்பட்டு ஹன்ஷிகா மோத்வானி கடந்த 4ஆம் தேதி 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணக்கமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவர்களது வீட்டில் விவாகரத்து என்ற பிரச்சனை எழுந்துள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஷக்கலக்கா பூம் பூம் என்ற சீரியலின் மூலம் ஹன்சிகா அவரது திரைப்பயணத்தைத் தொடங்கினார். இந்தியில் வெளியான கோய் மில் கயா, ஹவா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ, போன்ற சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்திருப்பார்.

பின்னர் நடிகர் அல்லு அர்ஜின் நடித்திருந்த தெலுங்கு படமான "தேசமுதுரு" என்ற மூலம் வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாக்கினார். அந்த பின்னர் பல படங்களில் நடித்த நடிகை ஹன்ஷிகா நடிகர் தனுஷ் நடித்திருந்த "மாப்பிள்ளை" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக்கினார். அதன் பின் வேலாயுதம், எங்கேயும் காதல், பிரியாணி, ஆம்பள, புலி, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, ரோமியோ ஜூலியட், போகன்,குலேபகாபலி மான் கராத்தே, அரண்மனை 1 மற்றும் 2 ,என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் ஹன்ஷிகா மோத்வானியின் திருமணம் கோலாகலமாக மூன்று நாட்கள் நடந்தது. இந்த திருமணத்தில் பாலிவுட், டோலிவுட் என பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இப்படியிருக்கும்போது ஹன்ஷிகா மோத்வானியின் சகோதரனாகிய பிரசாந்த் மோத்வானி தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவாகரத்து :

பிரசாந்த் மோத்வானி கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி முஸ்கான் நான்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பாலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திருமணமாகி சிறிது நாட்களில் இவர்கள் இருவருக்கும் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் பிரிந்து வாழ்ந்து வரும் இருவரும் தற்போது விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

விவாகரத்திற்கான காரணம் :

இவர்களது விவாகரத்திற்கான காரணம் தெரியாத நிலையில் பிரசாந்த் மோத்வானி அவருடைய ஷோசியல் மீடியா பக்கங்களில் இருந்து திருமண புகைபடங்களை நீக்கியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தான் ஏன் பிரசாந்த் மோத்வானி - முஸ்கான் நான்சி தம்பதி விவாகரத்து செய்யவிருக்கின்றனர் என்று தகவலானது கிடைத்துள்ளது.அதாவது பிரசாந்த் மோத்வானியின் மனைவியான முஸ்கான் நான்சிக்கு பெல்ஸ் பால்ஸ் என்ற நோய் உள்ளதாக தெரியவந்துள்ளது.

முஸ்கான் நான்சி போட்டிருந்த பதிவு :

மேலும் இந்த முக முடக்கம் நோயால் முஸ்கான் நான்சியின் முகத்தில் பதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முஸ்கான் நான்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் தன்னுடைய கணவரான பிரசாந்த் மோத்வானியை குறிப்பிடாமல் இந்த நோயால் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள வலிகளை பற்றி உருக்கமாக கூறியிருந்தார், மேலும் இந்த கடினமான காலத்தில் என்னுடைய பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருப்பதாக உருக்கமாக பேசியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full