தன் தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்யும் ஹன்சிகா - அவரது திருமணத்தில் ஹன்சிகா போட்ட ஆட்டத்தை பாருங்க.

By Arun · 4/11/2022

ஹன்சிகா திருமணம் செய்துகொள்ளும் நபருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் விசமும், அவரது திருமணத்தில் ஹன்சிகாநடமாடி இருக்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார். அதன் பின் இவர் வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை 1,2 , ரோமியோ ஜூலியட், போகன்,குலேபகாபலி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் சிம்புவுடனான காதலுக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்தவில்லை. பின் சிம்பு-ஹன்சிகா காதல் பிரேக் அப் ஆனது. அதை அடுத்து நடிகை ஹன்சிகா நடன புயல் பிரபு தேவாவுடன் காதலில் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தது.ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாமல் இருந்தது. இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் மஹா மாபெரும் தோல்வி யடைந்து. இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .

ஹன்சிகாவின் திருமணம் :

சமீப காலமாக ஹன்சிகா கூடிய விரைவிலயே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது.நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை தான் ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். தன்னுடன் இணைந்து ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வரும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா என்பவரை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது.

https://www.youtube.com/watch?v=MI1tKZvyOkc

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது திருமணம் பற்றிய தகவலை உறுதி செய்து இருந்தார் ஹன்சிகா.  சமீபத்தில் கூட ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோஹைல் கதுரியா ஈபிள் டவர் அருகில் நின்று கொண்டு தன் காதலைத் தெரிவிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்து இருந்தார். கீழே 'என்னைத் திருமணம் செய்து கொள்வாயா' என்ற வாசகமும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

வருங்கால கணவரின் முதல் திருமணம் :

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஹன்சிகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவர் குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள இருக்கும் சோஹைல் கதுரியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டதாம். மேலும், இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடைபெற்று இருக்கிறது.

வைரலாகும் வீடியோ :

அவர் திருமணம் செய்த பெண்ணின் பெயர் ரிங்கி, இவர் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியும் கூட. சோஹைல் கதுரியா மற்றும் ரிங்கியின் திருமணம் படு கோலாகளமாக நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்துகொண்டார். இப்படி ஒரு நிலையில் இந்த திருமண வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஹன்ஷிகா தனது வருங்கால கணவர் மற்றும் தோழியுடன் ஆட்டம் போட்டு இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full