கணவரின் புகைப்படங்களை அதிரடியாக தூக்கிய ஹன்சிகா - அப்போ விவகாரத்து கன்ஃபார்மா?
நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து விவகாரம் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் சீரியல் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதன் பின் இவர் ஹிந்தியில் வெளியான பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருந்தார். பின்னர் இவர் தெலுங்கு படத்தின் மூலம் தான் வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார். அதன் பின்னர் இவர் முதலாக முதலில் தனுஷ் நடித்திருந்த “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
அதனை தொடர்ந்து இவர் வேலாயுதம், எங்கேயும் காதல், பிரியாணி, ஆம்பள, புலி, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, ரோமியோ ஜூலியட், போகன், குலேபகாபலி, மான் கராத்தே, அரண்மனை 1 மற்றும் 2 என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இடையில் இவர் எந்த திரைபடத்தில் நடிக்காமல் இருந்தார். அதன் பின் இவர் நடித்த “மஹா” படம் வெளியாகி இருந்தது. இந்த படமானது ஹன்சிகாவின் 50வது படமாகும். பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படமானது அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்க வில்லை. பின் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
ஹன்சிகா திரைப்பயணம்:
இதற்கிடையில் ஹன்சிகா அவர்கள் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் 2020ஆம் ஆண்டு தொழில் கூட்டாளியாக பயணித்து வருகிறார்கள். அனைவரும் எதிர்பார்த்த இவர்களது திருமணமானது 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்தது. சோஹைல் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். ஹன்சிகாவின் தோழியை தான் சோஹைல் முதல் திருமணம் செய்திருந்தார். இருந்தாலுமே ஹன்சிகாவுடன் காதல் ஏற்பட்டதால் முதல் மனைவியை சோஹைல் விவாகரத்து செய்தார். அதற்குப்பின் சோஹைல், ஹன்சிகாவை திருமணம் செய்து கொண்டார்.
ஹன்சிகா திருமணம்:
இப்படி இருக்கும் நிலையில் ஹன்ஷிகா தன் கணவருடன் கருத்து வேறுபாட்டு காரணமாக பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி சில மாதங்களாக தன்னுடைய அம்மா வீட்டில் தான் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவிற்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி இருக்கிறது. தங்களுடைய முதல் திருமண நாளுக்கு தான் ஹன்சிகா தன்னுடைய கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். அதற்குப்பின் ஓராண்டுக்கு மேலாக மீடியாவில் கணவனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எதையுமே பதிவிடாமல் இருந்தார். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக ஹன்சிகா எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்தார்.
சோஹைல்-ஹன்சிகா விவாகரத்து சர்ச்சை:
அதன் பின் சில வாரங்களுக்கு முன் சோஹைல் இது தொடர்பாக அளித்த பேட்டியில், எங்களை பற்றி வரும் தகவல் எதுவும் உண்மை கிடையாது. பிரிந்து வாழ்வது உண்மையா? விவாகரத்து செய்து உண்மையா? என்ற கேள்விக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என்று கூறியிருந்தார். அதோடு ஹன்சிகா இந்த விவாகரத்து விவகாரம் தொடர்பாக வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஹன்சிகாவின் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் சர்ச்சையை கிளப்புகிறது.
ஹன்சிகா சர்ச்சை:
அதாவது ஹன்சிகா தன்னுடைய கணவர் சோஹைல் உடன் எடுத்த புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறார். இதன் மூலம் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டது. உறுதியானதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பே சமந்தா முதல் பல பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பதற்கு முன்பு இதேபோன்றுதான் சோசியல் மீடியாவில் புகைப்படங்களை எல்லாம் நீக்கி இருந்தார்கள். அதேபோல் தற்போது ஹன்சிகாவும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.