ஹீரோயின் ஆக வேண்டும் என்று வேகமாக வளர மகளுக்கு ஹார்மோன் ஊசி போட்டேனா - ஹன்சிகா அம்மா விளக்கம்.

By Manikandan · 19/2/2023

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. "ஷக்கலக்கா பூம் பூம்" என்ற சீரியலின் மூலம் தான் ஹன்சிகா தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் ஹிந்தியில் வெளியான கோய் மில் கயா, ஹவா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ, போன்ற பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். பின்னர் நடிகர் அல்லு அர்ஜின் நடித்திருந்த “தேசமுதுரு” என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் ஹன்சிகா வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார்.

திரைப்பயணம் :

அதன் பின்னர் இவர் தனுஷ் நடித்திருந்த “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து வேலாயுதம், எங்கேயும் காதல், பிரியாணி, ஆம்பள, புலி, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, ரோமியோ ஜூலியட், போகன், குலேபகாபலி, மான் கராத்தே, அரண்மனை 1 மற்றும் 2 ,என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் விக்ரம் பிரபு நடித்திருந்த "துப்பாக்கி முனை" என்ற திரைப்படத்தில் 2018ஆம் ஆண்டு கடைசியாக ஹன்சிகா நடித்திருந்தார்.

திருமணம் :

அதன் பின் இவர் கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைபடத்தில் நடிக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான “மஹா” என்ற திரைப்படத்தில் ஹன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் தான் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்து கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஒரு வாரம் கோலாகலமாக நடந்தது.

லவ் ஷாதி டிராமா :

இந்த நிலையில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் "லவ் ஷாதி டிராமா" என்ற தொடரில் தன்னுடைய சினிமா வழக்கை, காதல், திருமணம் போன்றவற்றை பற்றி பேசியிருந்தார். கடந்த வாரம் கூட தன்னுடைய தோழியை கணவரை திருமணம் செய்து கொண்டதாக ஷோசியல் மீடியாவில் எழுந்த புகாரை பற்றி பேசியிருந்தார். இந்நிலையில் மீண்டும் தன்மீது வைத்துள்ள சர்ச்சையான விஷயம் குறித்து பேசியுள்ளார்.

ஹன்ஷிகா பற்றிய சர்ச்சை

அவர் கூறுகையில் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருக்கும் போது எப்படி குறுகிய காலத்தில் ஹன்ஷிகா மோதவானி இந்த அளவிற்கு வளர்ந்தார் என்ற கேள்வி நான் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் போதிலிருந்தே கேட்கப்பட்டது. அதாவது ஹன்ஷிகா வேகமாக வளர அவருடைய தாயார் ஹார்மோன் ஊசிகளை அவருக்கு போட்டதாக குற்றம் சாடாப்பட்டது. இதற்குத்தான் நடிகை ஹன்ஷிகா மோத்வானியுடன் அவரது தாயார் மோனா மோத்வானி விளக்கமளித்துள்ளனர்.

ஹன்ஷிகா கூறியது :

இதற்கு குறித்து ஹன்ஷிகா கூறுகையில் இந்த விஷயம் பிரபலமானவர்களுக்கு ஏற்ப்படும் நிகழ்வு தான். எனக்கு 21 வயதாக இருக்கும்போதிலிருந்தே இந்த விஷயம் பற்றி ஊடகங்கள் எழுத தொடங்கின. ஆனால் அதனை பற்றி அப்போது நான் பேசவில்லை. இப்போது அந்த விஷியத்தை பற்றி பேச ஒன்றுமில்லை என்று கூறினார் நடிகை ஹன்ஷிகா.

ஹன்ஷிகா தாய் விளக்கம் :

இதற்க்கு பதிலளித்த ஹன்ஷிகா தாய் மோனா ஹன்ஷிகா இந்த விஷிஐம் உண்மை என்றால் டாடா ,ஆற்றும் பிர்லாவை விட நான் தான் மிகப்பெரிய பணக்காரியாக இருந்திருப்பேன். இந்த செய்தி உண்மையெனில் வேகமாக வளர என்னிடம் வாருங்கள்.இந்த விஷயம் குறித்து எழுதுபவர்களுக்கு பொது அறிவு என்று இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. எங்களின் குடும்பம் பஞ்சஜி என்னவென எங்ககளின் குடும்பத்தில் உள்ள பெண்கள் 12 வயது முதல் 16 வயது வரை வேகமாக வளர்ந்து விடுவார்கள் என்று கூறினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full