கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்கு அந்த ப்ரச்சனை வராது - நடிகை ஹன்ஷிகாவின் பதிலால் விளாசும் நெட்டிசன்கள்
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் ஹிந்தியில் பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருந்தார். பின்னர் இவர் தெலுங்கு படத்தின் மூலம் தான் வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார். அதன் பின்னர் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இதற்கிடையில் ஹன்சிகா அவர்கள் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்தார்.
இவர்கள் இருவரும் 2020ஆம் ஆண்டு தொழில் கூட்டாளியாக பயணித்து வந்தார்கள். பின் இவர்களது திருமணமானது 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்தது. சோஹைல் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். ஹன்சிகாவின் தோழியை தான் சோஹைல் முதல் திருமணம் செய்திருந்தார். இருந்தாலுமே ஹன்சிகாவுடன் காதல் ஏற்பட்டதால் முதல் மனைவியை சோஹைல் விவாகரத்து செய்தார். அதற்குப்பின் சோஹைல், ஹன்ஷிகாவை திருமணம் செய்து கொண்டார்கள்.
ஹன்சிகா விவாகரத்து:
திருமணமான சில வருடங்களிலேயே ஹன்சிகா- சோஹைல் உடைய உறவில் விரிசல் ஏற்பட்டது. இதை அடுத்து இருவருக்கும் சமீபத்தில் தான் விவாகரத்து கிடைத்தது. விவாகரத்திற்கு பிறகு இருவர் தரப்பிலிருந்தும் எந்த ஒரு தகவலுமே வெளியாகவில்லை. இதை அடுத்து சமீபத்தில் தான் ஹன்சிகா அவர்கள் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றியும் விவாகரத்து குறித்தும் மனம் திறந்து பேசி இருந்தார்.
ஹன்ஷிகா சொன்னது:
இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் சுரண்டல் தொடர்பான கேள்விக்கு நடிகை ஹன்சிகா கூறியிருப்பது, உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதிரியான விஷயங்கள் நடப்பது கிடையாது என்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற அனுபவம் இதுவரை எனக்கு ஏற்பட்டதும் இல்லை. எனக்கு தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி நான் எப்படி கருத்து சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறார். இதை ஹன்சிகா கூறி இருந்ததற்கு நெட்டிசன்கள் பலருமே சோசியல் மீடியாவில் விவாதம் செய்து வருகிறார்கள்.
நெட்டிசன்கள் விவாதம்:
அதில் ஒரு பயனர், எனக்கு சர்க்கரை நோய் இல்லை என்பதால் அந்த நோயே உலகில் இல்லை என்று சொல்வதைப் போல அன்சிகாவின் பதில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இன்னொருவர் பாதுகாப்பான சூழலில் வளர்ந்த ஹன்சிகா மற்றவர்களுடைய வலியை புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக பேசுகிறார் என்றார். இன்னும் சில பேர், உண்மையாக உழைப்பவர்களுக்கு இது நடக்காது என்று சொல்வதன் மூலம் பாதிக்க பட்டவர்கள் உழைக்காதவர்கள் என்று அர்த்தமா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.