சிம்புவின் பிரிவு குறித்து திருமணத்திற்கு பின் பேசிய ஹன்சிகா - இதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியதாம்.

By Manikandan · 20/2/2023

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. "ஷக்கலக்கா பூம் பூம்" என்ற சீரியலின் மூலம் தான் ஹன்சிகா தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் ஹிந்தியில் வெளியான கோய் மில் கயா, ஹவா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ, போன்ற பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். பின்னர் நடிகர் அல்லு அர்ஜின் நடித்திருந்த “தேசமுதுரு” என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் ஹன்சிகா வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார்.

திரைப்பயணம் :

அதன் பின்னர் இவர் தனுஷ் நடித்திருந்த “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து வேலாயுதம், எங்கேயும் காதல், பிரியாணி, ஆம்பள, புலி, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, ரோமியோ ஜூலியட், போகன், குலேபகாபலி, மான் கராத்தே, அரண்மனை 1 மற்றும் 2 ,என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் விக்ரம் பிரபு நடித்திருந்த "துப்பாக்கி முனை" என்ற திரைப்படத்தில் 2018ஆம் ஆண்டு கடைசியாக ஹன்சிகா நடித்திருந்தார்.

திருமணம் :

அதன் பின் இவர் கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைபடத்தில் நடிக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான “மஹா” என்ற திரைப்படத்தில் ஹன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் தான் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்து கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஒரு வாரம் கோலாகலமாக நடந்தது.

லவ் ஷாதி டிராமா :

இந்த நிலையில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் "லவ் ஷாதி டிராமா" என்ற தொடரில் தன்னுடைய சினிமா வழக்கை, காதல், திருமணம் போன்றவற்றை பற்றி பேசியிருந்தார். கடந்த வாரம் கூட தன்னுடைய தோழியை கணவரை திருமணம் செய்து கொண்டதாக ஷோசியல் மீடியாவில் எழுந்த புகாரை பற்றி பேசியிருந்தார்.

முதல் காதல் :

இந்நிலையில் அதற்கு முன்னதாக ஹன்ஷிகா பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார் அதில் அவருடைய முன்னால் காதலர் நடிகர் சிம்புவை காதலித்து பின்னர் பிரிந்த பிறகு மீண்டும் இரண்டாவது காதல் செய்ய கடினமாக இருந்ததா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹன்ஷிகா "ஆமாம் அதற்கு எனக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. நான் இன்னொருவரை காதலிக்க எனக்கு குறைந்த்து 7 முதல் 8 ஆண்டுகள் வரையில் ஆனது.

திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது :

நான் காதலை எப்போதுமே நம்புவேன், நான் காதலிக்கும் நபரிடம் அன்பாக இருந்தாலும் அதை நான் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டேன். அதே போல நான் திருமணத்தையும் நம்புகிறேன். உன்மையில் நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்க அதிக நேரம் தேவைப்பட்டது. ஏனென்றால் என்னுடையவராக கடைசி வரையில் என்னுடன் இருப்பவருக்குத் தான் நான் சரி என்று பதிலளிக்க விரும்பினேன். அந்த வகையில் என்னுடைய கணவர் சோஹைல் என்னுடைய காதலின் நம்பிக்கையை அதிகரித்தார் என்று ஹன்ஷிகா கூறினார்.

அது வேறு உறவு, இது வேறு உறவு :

பின்னர் செய்தியாளர் உங்கள் முன்னாள் உறவில் இருந்து ஏதாவது கற்றுக்கொண்டீர்களா என கேட்கப்பட்டது "அதற்கு பதிலளித்த ஹன்ஷிகா "அப்படியெல்லாம் எதுவும் இல்லை அது வேறு உறவு, அதோடு அது முடிந்த்து விட்டது. தற்போது உள்ள உறவு வேறு என்று கூறினார். நடிகர் சிம்புவும், நடிகை ஹன்ஷிகாவும் தொடக்க காலத்தில் உருகி உருகி காதலித்தார்கள் என்று கிசுகிசு கிளம்பியது அனைவருக்கும் தெரியும். ஆனால் சில காரணங்களினால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full