ஹன்சிகா மோத்வானி மீது போலீசில் புகார் கொடுத்த அண்ணி - பின்னணி என்ன? முழு விவரம் இதோ

By subhashini · 8/1/2025

நடிகை ஹன்சிகா மோத்வானியின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் பிஸியாக பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது கொடுத்திருக்கும் புகார் தான் இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது ஹன்சிகா மோத்வானி சகோதரர் பிரசாந்த் மோத்வானி. இவர் தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி ஜேம்ஸ் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் 2022 ஆம் ஆண்டில் பிரிந்து இரண்டு ஆண்டுகளாக தனித்தனியாக தான் வாழ்ந்து வந்தார்கள்.

ஹன்சிகா மோத்வானி

இந்த நிலையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகளில் 498-A, 323, 504, 506, 34 ஆகியவற்றின் கீழ் நடிகை ஹன்ஸிகா மோத்வானி குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து இருந்தார். அந்த புகாரில், என் கணவருக்கும் அவருடைய அம்மா, அவருடைய சகோதரி ஹன்சிகா மோத்வானி ஆகியோர் என்னிடம் குடும்ப வன்முறையில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஹன்சிகா மீது புகார்:

என் தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் இருவருமே தலையிட்டு என் கணவருடன் ஆன உறவில் சிக்கலை ஏற்படுத்தியிருந்தார்கள். அதனால் என்னுடைய கணவர் என்னை நிறைய தாக்கியிருக்கிறார். அந்த தாக்குதலினால் பெல்ஸ் பால்சி என்ற நோயால் நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். இருந்துமே தொடர்ந்து மூவரும் விலை உயர்ந்த பொருட்களை என்னிடம் கேட்கிறார்கள். சொத்து விவகாரத்திலும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்றெல்லாம் கூறி இருந்தார்.

பிரசாந்த் மோத்வானி பேட்டி:

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி, நான் சட்ட உதவியை நாடியிருக்கிறேன். இந்த நேரத்தில் நான் மேற்கொண்டு எந்த ஒரு கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த விவகாரம் தான் இணையத்தில் பூதாகரமாக வெடித்து வருகிறது.

ஹன்சிகா திரைப்பயணம்:

மேலும், ஹன்சிகா அவர்கள் சீரியலின் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதன் பின் இவர் இந்தியில் பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். பின் தெலுங்கில் வெளியான “தேசமுதுரு” என்ற படம் மூலம் தான் ஹன்சிகா வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார். அதன் பின்னர் இவர் “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full