ஆப்ரேஷன் மூலமா உடம்ப கொறச்சிட்டு யோகானு நடிக்கிறது - கேலி செய்தவருக்கு ஹன்சிகா கொடுத்த பதிலடி.

By Arun · 22/6/2023

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. "ஷக்கலக்கா பூம் பூம்" என்ற சீரியலின் மூலம் தான் ஹன்சிகா தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் ஹிந்தியில் வெளியான கோய் மில் கயா, ஹவா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ, போன்ற பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். பின்னர் நடிகர் அல்லு அர்ஜின் நடித்திருந்த “தேசமுதுரு” என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் ஹன்சிகா வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார்.

View this post on Instagram

A post shared by Hansika Motwani (@ihansika)

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் விக்ரம் பிரபு நடித்திருந்த "துப்பாக்கி முனை" என்ற திரைப்படத்தில் 2018ஆம் ஆண்டு கடைசியாக ஹன்சிகா நடித்திருந்தார். அதன் பின் இவர் கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைபடத்தில் நடிக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான “மஹா” என்ற திரைப்படத்தில் ஹன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் தான் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்து கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஒரு வாரம் கோலாகலமாக நடந்தது.

சமூக வளைத்ததில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று யோகா தினத்தை முன்னிட்டு யோகா செய்யும் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதற்கு இன்ஸ்ட்டா வாசி ஒருவர் 'இந்த நடிகைகள் எல்லாம் அறுவை சிகிச்சை மூலமாக ஒட்டுமொத்த உடலையும் மாற்றிவிட்டு ஏதோ யோகா மூலமாகத்தான் இவர்கள் தங்கள் உடலை மாற்றியதாக காண்பித்துக் கொள்கிறார்கள்' என்று கமண்ட் செய்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஹன்சிகா 'நான் எனக்காக பேசுகிறேன் நான் இவ்வாறாக தெரிவதற்காக கடினமாக உழைத்து இருக்கிறேன் அதில் யோகாவும் அடங்கும் மேலும் ஒரு ஜாலியான விஷயம் என்னவென்றால் யோகா வெறுப்புகளுக்கு பதிலாக நேர்மறை விஷயங்களை பரப்ப உதவும்' என்று பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கனவே ஹன்சிகாவை ஹீரோயினாக மாற்ற சிறு வயதிலேயே அவரது தாயார் ஹார்மோன் ஊசியை ஹன்சிகாவிற்கு போட்டதாக ஒரு சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் ஹார்மோன் ஊசி குறித்த சர்ச்சைகள் குறித்து விளக்கமளித்த ஹன்சிகா 'நான் சிறுமியாக இருந்தபோது எனது தாயார் ஹார்மோன் ஊசி போட்டு விரைவில் என்னை பெரிய பெண்ணாக்கி விட்டதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன.அதில் உண்மை இல்லை. நான் ஒரு பிரபலம் என்பதால் இதுபோன்ற வதந்திகள் வருகின்றன.எனக்கு ஊசி என்றால் பயம்.

ஊசி பயம் காரணமாக பச்சைக்குத்திக் கொள்வது இல்லை, அப்படி இருக்கையில் என் தாய் எப்படி ஹார்மோன் ஊசி போடுவார். நானும் எப்படி சம்மதிப்பேன். இந்த வதந்திகள் மூலம் எனது வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுகிறார்கள் என்பது புரிகிறது என்று கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து விளக்கமளித்த ஹன்சிகாவின் தாயார் 'இந்த விஷயம் உண்மை என்றால் டாடா மற்றும் பிர்லாவை விட நான் தான் மிகப்பெரிய பணக்காரியாக இருந்திருப்பேன். இந்த செய்தி உண்மையெனில் வேகமாக வளர என்னிடம் வாருங்கள். எங்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள் 12 வயது முதல் 16 வயது வரை வேகமாக வளர்ந்து விடுவார்கள்' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full