தென்னிந்திய நடிகை என்பதால் மறுத்தனர் - பாலிவுட்டில் சிறு வயதில் இருந்து நடித்த ஹன்சிகாவிற்க்கே இப்படி ஒரு நிலை.

By Ajju · 13/6/2023

தென்னிந்திய நடிகை என்பதால் எனக்கு ஆடை கொடுக்க மறுத்துவிட்டார்கள் என்று நடிகை ஹன்சிகா வேதனையுடன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. “ஷக்கலக்கா பூம் பூம்” என்ற சீரியலின் மூலம் தான் ஹன்சிகா தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். சீரியலின் பின் இவர் ஹிந்தியில் வெளியான கோய் மில் கயா, ஹவா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ, போன்ற பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

பின்னர் நடிகர் அல்லு அர்ஜின் நடித்திருந்த “தேசமுதுரு” என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் ஹன்சிகா வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார். அதன் பின்னர் இவர் தனுஷ் நடித்திருந்த “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து வேலாயுதம், எங்கேயும் காதல், பிரியாணி, ஆம்பள, புலி, ஒரு காதல், ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, ரோமியோ ஜூலியட், போகன், குலேபகாபலி, மான் கராத்தே, அரண்மனை 1 மற்றும் 2 ,என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

திரைப்பயணம் :

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் விக்ரம் பிரபு நடித்திருந்த “துப்பாக்கி முனை” என்ற திரைப்படத்தில் 2018ஆம் ஆண்டு கடைசியாக ஹன்சிகா நடித்திருந்தார். அதன் பின் இவர் கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைபடத்தில் நடிக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான “மஹா” என்ற திரைப்படத்தில் ஹன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.

திருமணம் :

இப்படி ஒரு நிலையில் தான் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்து கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஒரு வாரம் கோலாகலமாக நடந்தது. இவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். பின் நடிகை ஹன்ஷிகா மோத்வானி ஓடிடி தளத்தில் வெளியாகும் “லவ் ஷாதி டிராமா” என்ற தொடரில் தன்னுடைய சினிமா வழக்கை, காதல், திருமணம் என்று தன்னுடைய பற்றி பேசியிருந்தார்.

ஹன்சிகா அளித்த பேட்டி:

தற்போது இவர் தமிழில் ரவுடி பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஹன்சிகா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், பாலிவுட் பேஷன் டிசைனர்கள் நான் தென்னிந்திய நடிகை என்பதால் எனக்கு ஆடை கொடுக்க மறுத்தார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நிலைமை மாறி இருக்கிறது. அவர்களே தற்போது ஆடை கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். அதனை நான் அமைதியாக ஏற்றுக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full