ஜூலியை தொடர்ந்து அம்மன் வேடத்தில் ஓவியா- ஹீரோ இந்த இந்திய கிரிக்கெட் வீரராம்

By krithika · 6/11/2024

பிக் பாஸ் ஜூலியை தொடர்ந்து, தற்போது ஓவியா அம்மன் வேடத்தில் நடிக்கவிருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஓவியா. இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை ஆரம்பித்தார். அதற்குப்பின் இவர் விமல் நடிப்பில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'களவாணி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஓவியா நடித்திருந்தார்.

பின், சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த உடனே, கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியா பெரிய நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அவர் நடித்த சிலுக்குவார் பட்டி சிங்கம், 90 எம்எல், கணேஷா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, களவாணி 2 போன்ற படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

அம்மனாக மாறிய ஒவியம்:

மேலும், சமீபத்தில் நடிகை ஓவியா தனது காதலுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. இது தொடர்பாக கேரளாவில் ஓவியா புகார் ஒன்றைக் கொடுத்தார் இன தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது நடிகை ஓவியா அம்மனாக நடித்து வருவதை அறிவிக்கும் விதமாக சேவியர் என்னும் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். காளியம்மன் போல பல கைகளுடன் ஓவியா இருக்கும் போஸ்டரை பார்த்து ஏகப்பட்ட கமெண்டுகள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிந்து வருகின்றன.

View this post on Instagram

A post shared by Oviya (@happyovi)

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்:

ஓவியா அம்மனாக நடிக்கும் 'Savior' படத்தில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியாவுடன் இணைந்து 'பிரண்ட்ஷிப்' என்னும் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் பிளாப் ஆன நிலையில், ஹர்பஜன்சிங் இனிமேல் நடிக்கவே மாட்டார் என்று ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பிக் பாஸ் பிரபலத்துடனே (ஓவியா) கைகோர்த்துள்ளார்.

ஹர்பஜன் சிங் ட்வீட்:

தமிழ் மீது பேரன்பு கொண்ட கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது புது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், என் தங்க தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்‌. என்னோட அடுத்த தமிழ் படம் #Savior . உங்கள மகிழ்விக்க வரப்போகுது. உங்க அன்புக்காக வெயிட்டிங் என்று கூறியுள்ளார். இந்த படத்தில் ஓவியா, ஜி பி முத்து, VTV கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹர்பஜன் சிங்கின் அறிவிப்பை பார்த்து தற்போது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஹர்பஜன் சிங் குறித்து:

1998 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ஹர்பஜன் சிங், 2016 ஆம் ஆண்டு வரையில் விளையாடினார். அதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்ற அவர், மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய ஆட்டக்காரராக இருந்தார். அதன் பின்னர் இவர் தமிழில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். பின், அதே ஆண்டில் வெளியான 'டிக்கிலோனா' என்ற படத்தில் கேமியோ ரோலிலும் ஹர்பஜன் சிங் நடித்திருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full