என்னோட இந்த படத்துக்கு "A" சான்றிதழ் கொடுத்தாங்க.! வருந்தும் ஹரி.! எந்த படம் தெரியுமா..?

By Ajju · 19/9/2018
தமிழ் சினிமாவில் கமர்சியல் இயக்குனர்களை பட்டியலிட்டால் அதில் இயக்குனர் ஹரி கண்டிப்பாக இடம்பிடித்து விடுவார். இதுவரை சூர்யா, விக்ரம், விஷால் போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து பல கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரி. இயக்குனர் ஹரி, நடிகர் சூர்யாவை வைத்துத்தான் அதிக படங்களை இயக்கியுள்ளார். ஹரி முதன் முதலில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய படம் "ஆறு". இந்த படத்தை எடுப்பதற்கு முன்னாள் இயக்குனர் ஹரி 5 படங்களை இயக்கி இருந்தார். ஆனால் "ஆறு" படத்திற்கு மட்டும் தான் சென்சார் போர்டில் "A" சான்றிதழ் கிடைத்திருந்தது. சூர்யா நடித்த "ஆறு" படம் வெற்றிதான் என்றாலும் அந்த படத்திற்கு "A " சான்றிதழ் கிடைத்தது ஹரியை மிகவும் பாதித்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் தெரிவித்திருந்த இயக்குனர் ஹரி, மக்கள் சொல்லும் கருத்துக்களை நான் எப்போதும் எடுத்துக்கொள்வேன், அதற்கு ஒரு நல்ல உதாரணம் தான் "ஆறு" படம். அந்த படம் தெலுங்கு, தமிழ் என்று அணைத்து மொழியிலும் நல்ல ஹிட்டாக இருந்தது. ஆனால், அதற்கு "A " சான்றிதழ் கிடைத்தது. என்னுடைய படத்திலேயே A சான்றிதழ் கிடைத்தது அந்த படத்திற்கு தான். இதனால் அந்த படத்திற்கு பெமலி ஆடியன்ஸ் குறைந்துவிட்டார்கள். அதன் தாக்கம் என்னை மிகவும் பதித்தது. அதன் பின்னர் ஒரு 4 மாதம் எந்த படமும் கமிட் ஆகாமல் இருந்தேன். எனக்கு மிக பெரிய ஹீரோவுடன் ஆக்ஷன் படத்தை இயக்கம் வாய்ப்பும் வந்தது. ஆனால் அதனை நான் மறுத்துவிட்டேன்.அதன் பின்னர் ஒரு நல்ல குடும்ப படம் தர வேண்டும் என்று எண்ணி "தாமிரபரணி" படத்தை பண்ணினேன் என்று கூறியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full