நீண்ட இடைவெளிக்கு பின் பவன் கல்யாண் நடித்த 'ஹரி ஹர வீரமல்லு' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 25/7/2025

தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பவன் கல்யாண். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பின்
இவர் ஆந்திர அரசியலில் ஈடுபட்ட உடனே சினிமாவிலிருந்து சில வருடம் விலகி இருந்தார். தற்போது இவர்
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்திருக்கிறார். பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

இந்த கதை 1600 களில் நடக்கிறது. படத்தில் பவன் கல்யாண் வீர மல்லு ரோலில் நடித்திருக்கிறார். வீரமல்லு திருடுவதில் ரொம்பவே கெட்டிக்காரர். அதாவது, பணக்காரர்களிடம் இருந்து திருடி இல்லாதவர்களுக்கு தானம் தர்மம் செய்பவர் தான் வீரமல்லூர். இவர் நவாப்புக்கு வர வேண்டிய வைரங்களை எல்லாம் கொள்ளையடித்து விடுகிறார். பின்வரும் வழியில் ஒரு கட்டத்தில் நவாப் இடம் வீரமல்லு சிக்கியும் கொள்கிறார்.

நவாப் இவருக்கு தண்டனை கொடுக்காமல் அவருடைய திறமையை அறிந்து இன்னும் சாதிக்கலாம் என்று
திட்டம் போடுகிறார்கள். பின் கோவிலூர் வைரத்தை திருட வீரமல்லுக்கு நவாப் கட்டளை இடுகிறார்கள்.
கோகினூர் வைரம் அவுரங்கசீப்பிடம் இருக்கிறது. அதை வீரமல்லு கொள்ளையடித்தாரா? அவுரங்கசீப்புக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை? கடைசியில் என்ன ஆனது? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

படத்தில் ஹீரோ பவன் கல்யாண் வீரமல்லுவாக சிறப்பாக நடித்திருக்கிறார். சொல்லப்போனால் ஒன் மேன் ஆர்மியாகவே படத்தை சுமந்து சென்று இருக்கிறார். மேலும், இவர் குஸ்தி, கத்தி சண்டை என அனைத்திலும்மே தன்னுடைய சிறப்பை காண்பித்து இருக்கிறார். இவரை அடுத்து ஹீரோயினியாக நிதி அகர்வால் வந்திருக்கிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். இந்த கதை 1600 களில் நடக்கிறது. படத்தின் செட்டுமே நன்றாக இருக்கிறது. அதேபோல் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. முதல் பாதி விறுவிறுப்பாக சென்றிருக்கிறது. இடைவெளிக்கு பிறகுதான் கதை சிறப்பாக வருகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதோடு பொறுமையாகவும் செல்கிறது. இரண்டாம் பாதியும் கிளைமாக்ஸ் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கொடுத்திருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும். மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவுமே இல்லை. படத்தினுடைய ஒளிப்பதிவு எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒருமுறை சென்று தியேட்டரில் படத்தை பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=CS_YcwFpFBM

நிறை:

பவன் கல்யாண் நடிப்பு

கதைக்களம் அருமை

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது

நடிகர்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

குறை:

இரண்டாம் பாதி பொறுமையாக செல்கிறது

ஆங்காங் சில லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் ஹரி ஹர வீரமல்லு - முயற்சி

Tamil Behind Talkies AMP · Quick view
View full