ஒரே ஆண்டில் முதல் மனைவியை விவாகரத்து, தற்போது காதலியை இரண்டாம் திருமணம் செய்த பிரபல நடிகர் ஹரிஷ் உத்தமன்.

By Rajkumar · 21/1/2022

விஜய் பட நடிகர் ஹரிஷ் உத்தமன், மலையாள நடிகையை இரண்டாவது திருமணம் செய்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக விளங்குபவர் ஹரிஷ் உத்தமன். ஆரம்பத்தில் இவர் பாராமவுன்ட் ஏர்வேஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்களில் 3 ஆண்டுகளாக பணியாற்றினார். அதற்குப் பிறகு தான் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக மீடியாவிற்குள் நுழைந்தார். பின்னர் சூர்யா பிரபாகரன் இயக்கிய தா என்ற தமிழ் படத்தில் நடித்தார். இது தான் இவருடைய முதல் படம். அதே படத்திற்காக நார்வே தமிழ் பட விழாவில் சிறந்த புதுமுக நடிகர் என்ற விருதை பெற்று இருந்தார்.

Harish Uthaman @ Thani Oruvan Movie Thanks Meet Photos

இதனை தொடர்ந்து இவர் ராதா மோகன் இயக்கத்தில் கௌரவம் என்ற படத்தில் நடித்தார். அதற்கு பிறகு சூரிய பிரபாகரன் இவரை இயக்குனர் சுசீந்திரனிடம் சிபாரிசு செய்தார். பின் சுசீந்திரன் இயக்கத்தில் விஷாலின் நடிப்பில் வெளிவந்த பாண்டிய நாடு என்ற படத்தில் ஹரிஷ் உத்தமன் வில்லனாக நடித்து இருப்பார். இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஹரிஷ் உத்தமன் நடித்த படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் நாடு, தனி ஒருவன், பாயும் புலி, றெக்க, தொடரி, பைரவா, டோரா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் வில்லனாகவும், துணை நடிகராகவும் மிரட்டி இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு இவர் தமிழ் படங்களில் பிரபலமாக இருந்தாலும் இவருடைய பூர்வீகம் கேரளா. இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

ஹரிஷ் உத்தமன் முதல் திருமணம்:

நடிகர் ஹரிஷ் உத்தமன் அவர்கள் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு மேக்கப் ஆர்டிஸ்ட் அம்ரிதா என்பவரை திருமணம் செய்து இருந்தார். அவர் மும்பையைச் சேர்ந்தவர். ஆனால், திருமணமான ஒரு வருடத்துக்குள் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இப்படி ஒரு நிலையில் ஹரிஷ் உத்தமன் அவர்கள் மலையாள நடிகை சின்னு குருவிலா என்பவரை காதலித்து வந்தார். தற்போது ஹரிஷ் உத்தமன்- சின்னு குருவிலா திருமணம் செய்து உள்ளார்கள்.

ஹரிஷ் உத்தமன் இரண்டாவது திருமணம்:

இந்த தகவலை இவரே கேரளா ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கிறார். மேலும், இவர்களின் திருமணம் மாவேலிக்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் எளிமையான முறையில் நடைபெற்று இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்களின் திருமணத்தை இருவரும் பதிவு செய்துள்ளனர். சிறப்புத் திருமணச் சட்டம் என்பது மத நம்பிக்கை இல்லாதவர்கள் மதங்களைப் பற்றி அக்கறை இல்லாதவர்களுக்கான திருமண பதிவு.

ஹரிஷ் உத்தமன் திருமண புகைப்படம்:

மேலும், ஹரிஷ் உத்தமன் கரம் பிடித்துள்ள நடிகை சின்னு குருவிலா மலையாள நடிகை. இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஃபகத் பாசில் நடிப்பில் தேசிய விருது வென்ற திரைப்படமான 'நார்த் 24 காதம்', மம்மூட்டியின் 'கஸபா' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும், இவருடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். தற்போது இவர்களுடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full