22 ஆண்டுகளில் ஏன் ஒரு பாடல் கூட பாடவில்லை - ஹாரிஸ் ஜெயராஜ் சொன்ன காரணம்.

By ·

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் பல தமிழ் திரைப் படங்களுக்கு பின்னணி இசையும், பாடல்களும் அமைத்து உள்ளார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களுக்கும் இசை அமைத்து உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் 2001 ஆம் ஆண்டு "மின்னலே" என்ற படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக சினிமா துறையில் கால் பதித்தார்.

அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, ஷாம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். இவரின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் மற்ற இசையமைப்பாளர்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட வகையில் இருப்பது ரசிகர்களுக்கு பிடித்து இருந்தது. மேலும் படையப்பா படத்தில் ஆஸ்கார் புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பார். படத்தில் ரஜினிக்கு வரும் தீம் மீயூசிக் இப்போது கேட்டாலும் கூட நமக்கு புல்லரிக்கும் வகையில் இருக்கும்.

சூப்பர் ஸ்டார் படத்தில் வரும் பிஜிஎம் :

அந்த படத்தில் நீண்ட காலம் கழித்து நீளம்பரியை பார்க்க செல்லும் சூப்பர்ஸ்டார், நீலாம்பரியால் உட்கார சேர் இல்லாமல் நிற்க வைக்கப்படுவார். அந்த சமயத்தில் மேல் இருக்கும் ஊஞ்சலை தன் துண்டால் கீழிறக்கி செம்ம ஸ்டைலாக அமர்வார் சூப்பர்ஸ்டார். இந்த சீனில் செம்மையாக ஒரு தீம் மியூசிக் வரும். இந்த தீம் மியூசிக்கை, ஏ.ஆர் ரஹ்மான் போடவில்லை, அவருக்கு உதவியாக பணிபுரிந்து வந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் அந்த தீம் மியூசிக்கை போட்டது என சமீபத்தில் கே.எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பணியாற்றும் படங்கள் :

இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் வெளியான லெஜண்ட் படத்திற்கு கூட இசையமைத்து இருந்தார். ஆனால் அந்த படம் அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படம் உள்பட 3 படங்களில் பணியாற்றி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் 2001 ஆம் ஆண்டு மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். 22 ஆண்டுகள் பல படங்களுக்கு இசையமைத்தும் இதுவரை ஒரு பாடல் கூட ஹாரிஸ் ஜெயராஜ் பாடியது இல்லை.

பேட்டியில் கூறியது :

இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்டது.அவர் கூறியதாவது "கண்டிப்பாக நான் படவேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது நான் ஒரு நல்ல பாடகரா என்ற கேள்வியை எனக்கே கேட்டுக்கொள்வேன். ஆனால் அந்த கேள்விக்கு திருப்திகரமான பதில் கிடைக்குமா என்றால் கிடையாது. எனவே நான் ஒரு இசையமைப்பாளர் அதனால் இப்படித்தான் பாடுவேன் என்ற ஒரு எண்ணத்தை மக்களிடம் கொடுக்க கூடாது.

View this post on Instagram

A post shared by 🇭‌🇦‌🇷‌🇷‌🇮‌🇸‌ 360 (@harris_music_express)

அந்த பாடலை ஒரு உண்மையான பாடகர் எப்படி அருமையாக பாடுகிறாரோ அப்படி என்னால் பாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தால் தான் நான் பாடுவேன். அதை தவிர்த்து எனக்கு தெரியாத ஒரு தொழிலை நான் பார்க்கக் கூடாது என்று எதார்த்தமாக பதில் கூறினார். இந்த பதில் பாராட்டக்கூடிய வகையில் இருந்தாலும் தமிழ் சினிமாவில் அனிருத், ஏ ஆர் ரகுமான் உள்பட பல இசைக் கலைஞர்கள் பாடல்களை பாடி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்றது குறிப்பிடதக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full