அது எப்படி டயல் பண்ணா இப்படி வரும் ? VIP படத்துல இந்த மிஸ்டேக்க நோட் செஞ்சீங்களா ?

By Rajkumar · 8/5/2020

ஒரு திரைப்படத்தில் இருக்கும் காமெடி காட்சிகள் மக்கள் சிரிப்பதற்கு மட்டுமே இருந்தது. காமெடி காட்சிகளை பார்த்து சிரிப்பதையும் தாண்டி அதில் சிந்திக்கவும் வைத்தவர் பிரபல காமெடி நடிகர் விவேக். இவரது காமெடி காட்சிகளில் கண்டிப்பாக ஒரு மெசேஜும் இருக்கும். அது நம் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தாக நிச்சயம் இருக்கும். ஆகையால், ரசிகர்கள் இவரை பாசத்துடன் 'ஜனங்களின் கலைஞன்' என்று அழைத்து வருகின்றனர்.

பல முன்னணி நடிகர்களின் படங்களில் விவேக் காமெடியனாக வலம் வந்திருக்கிறார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருக்கிறார் விவேக். இவரது நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு 'தல' அஜித்தின் 'விஸ்வாசம்', 'தளபதி' விஜய்யின் 'பிகில்' மற்றும் 'வெள்ளைப் பூக்கள்' என மூன்று படங்கள் வெளி வந்தது. இதில் 'வெள்ளைப் பூக்கள்' படத்தில் விவேக்கே கதையின் நாயகனாக நடித்திருந்தார்.

அந்த படத்தை அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன் இயக்கியிருந்தார். மற்ற இரண்டு படங்களிலும் (விஸ்வாசம் மற்றும் பிகில்) காமெடியில் கலக்கியிருந்தார் விவேக். கடைசியாக விவேக் காமெடியனாக நடித்த படம் 'தாராள பிரபு'. இப்படம் இந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 13-ஆம் தேதி வெளி வந்தது. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியிருந்த இப்படத்தில் ஹீரோயினாக நடிகை தன்யா ஹோப் நடித்திருந்தார்.

உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'கொரோனா' பிரச்சனை முடிந்த பிறகு, மீண்டும் 'தாராள பிரபு' ரிலீஸ் செய்யப்படுமாம். இந்நிலையில், காமெடி நடிகர் விவேக் நடித்த ஒரு படத்தின் காட்சியில் உள்ள மிஸ்டேக்கை நோட் செய்து நெட்டிசன்ஸ் ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.

2014-ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படத்தில் கதையின் நாயகனாக பிரபல நடிகர் தனுஷ் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அமலா பால் டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தினை வேல்ராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் விவேக் 'அழகு சுந்தரம்' என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார். படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் விவேக், செல் முருகனிடம் இருந்து செல் போனை வாங்கி மனைவிக்கு கால் செய்வார். விவேக்கின் மனைவி நம்பரை செல் முருகன், 'GF' என்று மொபைலில் பதிந்து வைத்திருப்பார். தற்போது, இக்காட்சியில் அந்த மொபைலில் இன்கம்மிங் கால் என்று தான் வருகிறது, அது பெரிய மிஸ்டேக் என்று மீம்ஸ் போட்டுள்ளனர் நெட்டிசன்ஸ்.

behindtalkies AMP · Quick view
View full