தற்போது நடைபெறும் விவாதங்கள் தேவையில்லாத ஒன்று. 35 ஆண்டுகளுக்கு பின் நடந்த சம்பவத்தை தற்போது பேச வேண்டிய தேவையில்லை என்றும் அதன் பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் அவருக்கு நடைபெற்ற இன்னல்கள் குறித்து பேசினார்.

அதில் 1989ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு அப்போதையை ஆளுங்கட்சியாக இருந்த திமுக எம்.எல்.ஏ கள் அவரிடம் தகாத வார்த்தைகளாலும் அவரது சேலையை பிடித்து இழுத்து தகாத முறையில் திமுகவின் எம்.எல்.ஏ நடந்து கொண்டார் எனவும் அவர் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியது.

Advertisement

முதல்வர் கருத்து:

இந்த கருத்து குறித்து மறுப்பு தெரிவித்த தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் இது போன்ற நிகழ்வு இங்கு நடைபெறவில்லையென்றும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏதோ வாட்ஸ் ஆப்பில் வரும் செய்திகளை நாடாளுமன்றத்தில் கூறி வருகிறார் என்றும் அவர் கூறியிருந்தார். அது அவராக நடத்தி கொண்ட நாடகம் அது அந்த அவையில் இருந்த அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.

சட்டசபையில் இது போன்று நடந்து கொள்ள அவர் போயஸ் கார்டனில் ஒத்திகை பார்த்தார் என்றும் கூறியிருந்தார். இதற்க்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்க்கு முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போது திமுக எம்.பியும் திருநாவுக்கரசர் அவ்வாறு ஏதும் நடக்க வில்லை என்று கூறினார். அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயக்குமார் “அவர் உண்ட விட்டிற்கு துரோகம் செய்கிறார்” என்று கூறியிருந்தார்.

Advertisement

திருநாவுக்கரசின் கருத்து:

ஜெயகுமார் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர் “நான் அதிமுகவில் இருந்த போது அங்கு நான் ஏதும் உண்ணவில்லை அப்புறம் எப்படி நான் துரோகம் செய்ய முடியும் என்று கேட்டு இருந்தார். “நான் ஜெயலலிதாவிற்கு நன்றி கடன் பட்டவன் அல்ல அவர் தான் எனக்கு நன்றி கடன் பட்டவர், நான் அவருக்கு நிறைய நன்மைகள் செய்து இருக்கிறேன் ஆனால் அவர் எனக்கு நன்மை ஏதும் அதிகம் செய்யவில்லை. அவரை நான் தான் காப்பற்றி கொண்டு வந்ததால் தான் அவர் முதலமைச்சரானார். ஜெயகுமார் யார் அவர் எப்போது அதிமுகவிற்கு வந்தார்.

Advertisement

ஜெயகுமார் போன்றவர்கள் என்னை பற்றி கருத்து தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. இது 35 வருடங்களுக்கு முன் நடந்தது அதை பற்றி இப்போது பேசவேண்டிய தேவையில்லை. வேறு மாநிலத்தில் ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் இதை பற்றி கருத்து குறுவது அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தம் கிடையாது. அவர் கருத்து கூற வேண்டும் என்றால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதை பற்றி பேசட்டும்” என்று கூறினார்.                

Advertisement