அப்பாவை போலவே கொரோனா விழிப்புணர்வில் பட்டையைக் கிளப்பும் அமைச்சர் விஜயபாஸ்கர் மகள். வைரலாகும் வீடியோ.

By ·

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் யுத்தத்தை விட பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் விஜய் பாஸ்கர் அவர்களின் மகள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வாக பாட்டு பாடி நடனமாடி உள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தற்போது தமிழ்நாட்டு மக்களின் ரசிகராக மாறினார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர் அரசியல்வாதி மட்டுமில்லாமல் எம்பிபிஎஸ் படித்த மருத்துவரும் ஆவார். இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முதன் முதலில் மதுரையில் தான் உயிர் இழப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த கொரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று சோதனை செய்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் விஜய் பாஸ்கர். பஸ் ஸ்டாண்ட், ஏர்போட் என ஒன்று விடாது அனைத்து இடங்களையும் சோதனை செய்து கிருமிநாசினி ஏற்படுகிறதா? அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளதா? என்று ஆய்வுகளையும் நேரடியாக கண்காணித்து வருகிறார்.

https://twitter.com/ADMKofficial/status/1242664109662859264

சுகாதார விழிப்புணர்வு பிரச்சினைகளில் மட்டுமின்றி மருத்துவ ஊழியர்களை நேரடியாக சந்தித்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அதிலும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். இவர் சட்டசபை கூட்டம், முதல்வர் தலைமையிலான ஆய்வுக் கூடம், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் என அனைத்திலும் பங்கேற்று தன்னுடைய கடமையை செய்து வருகிறார், இந்த பொறுப்புணர்ச்சியை பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் சட்டசபையில் இவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

மேலும், நடிகர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தும் அமைச்சர் விஜய பாஸ்கரை மனதார பாராட்டினார். காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமி சட்ட சபையில் பேசும்போது, விஜயபாஸ்கர் சுறுசுறுப்பான, பொறுப்பான ஒரு அரசியல்வாதி என்றும் இவர் சீன நாட்டுக்கு சென்று ஆலோசனை வழங்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் விஜயபாஸ்கருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் போலவே பொறுப்புடன் அவரது மகள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக பாட்டு பாடி நடனமாடி உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த மக்கள் அனைவரும் விஜயபாஸ்கருக்கும், அவரின் மகளுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full