தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகப் பிரபலமான மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு யாரும் சினிமா துறையில் கடும் முயற்சிகளை செய்து வளர்ந்து வந்தவர். சமீப காலமாகவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் அனைத்து படங்களிலும் அவர் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “நம்ப வீட்டு பிள்ளை” படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை தந்தது. மேலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே பயங்கர வரவேற்பு பெற்று வந்த படம்.

Advertisement

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை புகழ் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் இன்று திரையரங்கிற்கு வந்து உள்ள படம் “ஹீரோ”. இந்த படம் எடுக்க தொடங்கியதில் இருந்தே பல பிரச்சனைகளில் சிக்கி தற்போது வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடி கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். மேலும், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்து உள்ளார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் குழந்தைகளை கவரும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டாக உருவாகி உள்ளது. பல சூப்பர் ஹீரோக்களை பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹீரோ படம் வெளியாகி உள்ளது.

கதைக்களம்:

Advertisement

இந்த உலகில் ஒவ்வொரு மாணவனும் தான் வாழ்க்கையில் டாக்டர், போலீஸ், வக்கீல், கலெக்ட்டர் ஆக வேண்டும் என பல கனவுகளுடன் இருப்பார்கள். ஆனால், சிவகார்த்திகேயன் மற்றும் சக்திமான், சூப்பர் மேன் போல சூப்பர் ஹீரோவாக ஆக வேண்டும் என்று நினைக்கின்றான். எப்போதுமே பெற்றோர்கள் தங்களுடைய எண்ணங்களை தன் பிள்ளைகள் மீது திணிப்பதை வழக்கமான ஒன்றாகி விட்டது. ஆனால், அவர்கள்(மாணவர்கள்) என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறதை கேட்டுக் கொள்வதில்லை. அந்த வகையில் இந்த ஒரு படம் மாணவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹீரோவாக ஆக வேண்டும் என்று ஆசை. அதனாலேயே இவரை உலகம் வித்தியாசமான முறையில் பார்க்க தொடங்கியது.

Advertisement

பின் இவரை ஒதுக்கி வைக்கவும் ஆரம்பித்து விடுகிறார்கள். அதோடு இவருடைய சொந்த அப்பாவே சிவகார்த்திகேயனை கண்ட மேனிக்கு திட்டி வீட்டில் இருக்காதே வெளியே போ! என்று ஒரு கட்டத்தில் துரத்தி விடுகிறார். இதனால் சிவகார்த்திகேயன் தன்னுடைய கனவை மறந்து வேற பாதையில் செல்கிறார். இந்த உலகில் வாழ்வதற்கு பணம் தேவை. அந்த பணத்தை சம்பாதிக்க பிராடு வழியில் செல்லலாம் என்று முடிவு செய்கிறார் சிவகார்த்திகேயன். பின் போலி சான்றிதழ்களை அடிக்கும் தொழில் செய்கிறார். இதில் லட்ச லட்சமாக சம்பாதிக்க தொடங்கினார். இது ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் ஊருக்கு வெளியில் யாருக்கும் தெரியாத இடத்தில் பையில் மாணவர்களை திரட்டி அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்.

அதில் ஒரு மாணவி தான் இவானா. இவானாவிற்கு ஏரோநாட்டிகல் படிக்க வேண்டும் என்பது அவனுடைய கனவு. அதை சிவகார்த்திகேயன் அர்ஜுனுக்கு தெரியாமல் நிறைவேற்றுகிறார். பின் இவானா அவர் படிப்பின் மூலம் ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டு பிடிக்கிறார். ஆனால், அந்த கண்டுபிடிப்பு வெளிவந்தால் கார்ப்பரேட் கம்பெனிகள் எல்லாம் பாதிக்கும் என்று வில்லன் குரூப் இவானவை தவறான முறையில் தான் இதைக் கண்டுபிடித்தார் என்று நிரூபிக்கிறார்கள். இதனால் இவானா மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். அதற்குப் பிறகு தான் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். எப்படி சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார்? எதற்காக அர்ஜுன் இப்படி அனைவருக்கும் பயந்து வாழ்கின்றார்? புதிதாக கண்டுபிடிப்பினால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டது?? போன்ற பல சுவாரசியமான விஷயங்கள் தான் படத்தின் மீதி கதை.

சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் செய்யும் சாகசங்கள் எல்லாம் வியப்பில் ஆழ்த்தியது. படத்தில் சிவகார்த்திகேயன் விட அர்ஜுன் பேசிய வசனங்கள், மாஸ் காட்சிகள் எல்லாம் வெறித்தனமாக உள்ளது. கதாநாயகி கல்யாணிக்கு தான் பெரிய அளவு கதாபாத்திரம் இல்லை என்றாலும் தன்னுடைய கதாபாத்திரத்தில் சரியாக நடித்து உள்ளார். உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் மாணவர்கள் பல்வேறு விஷயங்களை கண்டுபிடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் உலகில் அதிக இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா தான். ஆனால், இந்தியாவில் இதுவரை பெரிய அளவில் மாணவர்கள் கண்டுபிடிப்புகள் இல்லை. அப்படியே அவர்கள் கண்டுபிடித்தாலும் வில்லன்கள் அவர்களை அழித்து விடுகிறார்கள் என்ற கருத்தை அழகாக எடுத்து உள்ளார் இயக்குனர். தன்னுடைய கனவுகளை பெற்றோரிடம் சொல்ல இந்தியாவில் மட்டும் தான் குழந்தைகள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் இவர்கள் என்ன சொல்வார்கள்? அவர்கள் என்ன சொல்வார்கள்? என்று மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கை தான் இங்கு அதிகம் உள்ளது என்பதை சூப்பர் ஹீரோ படத்தில் தெளிவாக காட்டி உள்ளார்கள்.

பிளஸ்:

நம் இந்திய நாட்டின் மாணவர்கள், பெற்றோர்கள் நிலைமையை அழகாக காட்டி உள்ளார்

ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாம் வேற லெவல்.

நாளைய உலகம் உருவாகும் வகையில் கதை உள்ளது.

உண்மையிலேயே சிவர்த்திகேயன் , அர்ஜுன் நடிப்பு மாஸ்

மைனஸ்:

ஷங்கரின் ஜென்டில்மேன் படத்தின் நியூ வேர்சன் போல் உள்ளது எனவும் கூறுகிறார்கள்.

படத்தில் கதாநாயகிக்கு வேலையே இல்லை.

சூப்பர் ஹீரோ தலைப்புக்கு ஏற்றவாறு காட்சிகள் இல்லை.

படத்தின் அலசல்:

“இன்றைய இளைனர்கள் தான் நாளைய இந்தியா” என்பதை அழகாக எடுத்து காட்டி உள்ளார் இயக்குனர். மொத்தத்தில் ஹீரோ படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ ஆனார்.

Advertisement