தங்கலான், கங்குவா படங்களுக்கு வந்த புது சிக்கல், நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு - காரணம் இது தான்

By subhashini · 12/8/2024

தங்கலான், கங்குவா படங்களுக்கு வந்திருக்கும் புது சிக்கல் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவர் தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் விநியோகஸ்தரும் ஆவார். இவர் 'ஜில்லுனு ஒரு காதல்' என்ற படத்தின் மூலம்தான் தயாரிப்பாளராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

அதற்குப் பிறகு இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தங்கலான்' படத்திற்கு தயாரிப்பாளராக இருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

தங்கலான் படம்:

மேலும், இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் உடன் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழாவில் நடிகர்கள் தங்களின் படம் அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார்கள். தற்போது இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கங்குவா படம்:

அதேபோல், தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்றம் தீர்ப்பு:

மேலும், வருகிற அக்டோபர் 10-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதால் படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் தங்கலான், கங்குவா படத்திற்கு வந்திருக்கும் புது பிரச்சனை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தங்கலான் படத்தை வெளியிடுவதற்கு முன்பு ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், கங்குவா படத்தை வெளியிடும் முன்பு ஒரு கோடி ரூபாய் படத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது.

View this post on Instagram

A post shared by Puthiya Thalaimurai Tv (@puthiyathalaimurai)

ஞானவேல் ராஜா மீது புகார்:

அதுமட்டுமில்லாமல் பணம் டெபாசிட் செய்த பிறகு அது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு காரணம், அர்ஜுன் லால் சுந்தரதாஸ் என்பவரிடம் கடன் வாங்கி இருந்ததால், அந்த கடனை திருப்பி செலுத்தாததால் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடுத்து இருந்தார்கள். அதற்கு தான் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

behindtalkies AMP · Quick view
View full