நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

By subhashini · 27/11/2024

நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது தனுஷ் தொடர்ந்து இருக்கும் வழக்கு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தனுஷ்-நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது.

தற்போது இவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இதற்கு இடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் பெற்று இருந்தது. இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை.

விக்கி – நயன் திருமணம்:

மேலும், திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘ Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருந்தார்கள். இந்த திருமண நிகழ்வு வீடியோ கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நிலையில் அதற்கு முன்பே இந்த வீடியோவின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. அதில் மூன்று வினாடி ‘நானும் ரவுடிதான்’ படத்தினுடைய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனால் தனுஷ்- நயன்தாரா இடையே பெரிய சர்ச்சை வெடித்து இருந்தது.

நயன்தாரா அறிக்கை:

அதனால் நயன்தாரா, தனுஷ் மீது குற்றம் சாட்டி கடிதம் ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில், என்னுடைய ஆவணப்படத்திற்கு எதிராக நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் என்னும் தெளிவாக புரிகிறது. இது ரொம்ப தவறான செயல். மேடையில் நீங்கள் அன்பானவர் போல் நடிக்கிறீர்கள். நேரடியாக நடக்கும்போது பல வித்தியாசங்களை காட்டுகிறீர்கள். மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. நீங்கள் பொய்யான கதைகளையும், பஞ்ச் வசனங்களை ஆடியோ வெளியீட்டில் கொடுக்கலாம். ஆனால், கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். உங்களின் கீழ்த்தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகைகள் ஆதரவு:.

அதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே , நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த கோரிக்கை விடுத்தும் தனுஷ் NOC தரவில்லை என்றும் நயன்தாரா குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்த விவகாரம் இணையத்தில் பரவ தொடங்கியவுடன் நயன்தாராவிற்கு ஆதரவாக தனுஷுக்கு எதிராகவும் நிறைய நடிகைகள் ரியாட் செய்திருந்தார்கள். அந்த வகையில் நடிகைகளான ஸ்ருதி ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்வதி நாயர், அனுபமா, நஸ்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நயன்தாராவின் பதிவிற்கு லைக் செய்து ஆதரவு தெரிவித்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இவர்கள் அனைவருமே தனுஷ் உடன் சேர்ந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தொடர்ந்த வழக்கு:

இந்த விஷயம், சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து நடிகை நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரப்பட்டது. அதில், நடிகை நயன்தாரா மீது உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய தனுஷ் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் தனுஷ் வைத்த குற்றச்சாட்டுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவருமே பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு போட்டு இருக்கிறது. மேலும், இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full