இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள், யார் முதலிடம் தெரியுமா?- வெளியான பட்டியல் இதோ

By Rajkumar · 21/8/2024

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெருமலான ரசிகர்களை வைத்திருக்கும் காரணத்தாலேயே தென்னிந்திய சினிமாவை காட்டிலும் பாலிவுட் சினிமாவுக்கு மவுசு அதிகம். அதனால், பாலிவுட் நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்களாக இருந்தார்கள். ஆனால், அந்த நிலை தற்போது மாறிவிட்டது. தற்போது பாலிவுட் ரசிகர்களும் தென்னிந்திய சினிமாவை விரும்பி பார்க்கும் நிலை வந்துவிட்டது.

அதேபோல் பாலிவுட் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தென்னிந்திய நடிகர்களும் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்களின் பட்டியல் தான் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலை ஃபோர்ப்ஸின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இடம் பிடித்தவர்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

ஷாருக்கான்:

2024 ஆம் ஆண்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருப்பவர் ஷாருக்கான். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 150- 250 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

ரஜினிகாந்த்:

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 2024 அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ஒரு படத்திற்கு இவர் ரூபாய் 115- 270 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

விஜய்:

தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஒரு படத்திற்கு இவர் ரூபாய் 130- 250 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம்.

அமீர்கான்:

தனது நடிப்பினால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் அமீர்கான். அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இவர் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். ஒரு படத்திற்கு இவர் ரூபாய் 100- 275 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

பிரபாஸ்:

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 100- 200 கோடி வரை சம்பளம் பெற்று அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

அஜித் குமார்:

தமிழ் சினிமாவில் தல என்று செல்லமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 150- 165 கோடி வரை சம்பளம் பெற்று அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

சல்மான் கான்:

பாலிவுடில் பிளாக் பஸ்டர் ஸ்டார் என்று பெயர் வாங்கி இருக்கும் இவர் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 100- 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

கமலஹாசன்:

தனது ரசிகர்களால் ஆண்டவர் என்று அன்பாக அழைக்கப்படும் இவர் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார். ஒரு படத்திற்கு இவர் ரூபாய் 100- 150 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

அல்லு அர்ஜுன்:

தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகள் வெற்றிகரமாக படங்களில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், ஒரு படத்திற்கு ரூபாய் 100- 125 கோடி வரை சம்பளம் பெற்று அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.

அக்ஷய் குமார்:

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் பத்தாவது இடத்தை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பிடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 60- 145 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full