இதயத்தை திருடாதே சீரியலில் இருந்து விலகியதை உறுதி செய்த ஹிமா - அவரின் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்.

By Rajkumar · 10/5/2022

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் சீரியல் இதயத்தை திருடாதே. இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கலர்ஸ் மராத்தியில் ஹிட்டான ஜிவ் ஜலா ஏடே பிசா சீரியலின் ரீமேக் தான் இதயத்தை திருடாதே. அரசியல் ஆதாயங்களுக்காக `கல்யாணம்' என்ற பெயரில் இருவரின் வாழ்க்கை பகடைக்காயாக்கப்படும் கதை தான் இதயத்தை திருடாதே. பின் இதயத்தை திருடாதே சீரியல் முடிக்கப்பட்டு அதே நடிகர்களுடன் இதயத்தை திருடாதே சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் நவீன் – பிந்து.இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனும், சகானா என்ற கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து வருகிறார்கள். மேலும், சமூக வலைதளப் பக்கங்களில் இந்த ஜோடி குறித்த வீடியோக்கள் தான் அதிகம் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் நினைத்தார்கள்.

சஹானாவாக பிந்து :

ஆனால், நவீனும்- பிந்துவும் நாங்கள் நண்பர்கள் தான் என்று கூறி இருந்தார்கள். சமீபத்தில் நவீனுக்கும் சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் திருமணம் ஆக போகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் ஹிமா பிந்து சீரியலில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரின் சமீபத்திய இன்ஸ்டா பதிவும் அமைந்து இருக்கிறது.

ஹிமாவின் பதிவு :

அதில் '06.01.2020 முதல் 06.05.2022 வரை `இதயத்தை திருடாதே' தொடரில் சஹானாவாக நடித்திருக்கிறேன். இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் என் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்தக் கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. பலரது மனதையும் கொள்ளை கொண்ட இந்தக் கதாபாத்திரம் என் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது. தினமும் புதிதாக பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

தனி அடையாளத்தை கொடுத்திருக்கிறது :

குழந்தைகள் ப்ளே ஸ்கூலில் தனது நண்பர்களைச் சந்திக்க ஆவலாய் செல்வதைப்போல் நானும் உணர்ந்திருக்கிறேன்.இந்தப் பயணம் நான் யாரென எனக்கு அடையாளப்படுத்தியிருக்கிறது. எனக்கென தனி அடையாளத்தை கொடுத்திருக்கிறது. என்னுடைய பெற்றோர்கள், புரொடியூசர் மேம், இதயத்தை திருடாதே டீம், கலர்ஸ்டிவி தமிழ்.. ரசிகர்கள் நீங்க எல்லாரும் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். விரைவில் அடுத்த புராஜெக்ட்டில் சந்திக்கலாம்.

ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி :

`இதயத்தை திருடாதே' சஹானாவாக அறிமுகமாகி உங்களின் இதயங்களில் இடமளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஹிமா பிந்து விலகிய காரணம் என்ன என்பதை அவர் குறிப்பிடவில்லை. அதே போல ஹிமாவிற்கு பதில் யார் வரப் போகிறார் என்பதும் இன்னும் தெரியவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full