தமிழ் மீது பற்று கொண்ட நீங்க அவர் கையால விருது வாங்கி இருக்கீங்க - நிரூபர் கேள்வியால் கடுப்பான ஹிப் ஹாப் ஆதி.

By subhashini · 24/8/2023

கவர்னர் கையில் பட்டம் வாங்கிய சர்ச்சை குறித்து பேட்டியில் கோபமாக ஹிப் ஹாப் ஆதி கொடுத்திருக்கும் பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்கள் பலர் உள்ளார். ஜி வி பிரகாஷ், விஜய் ஆன்டனி போன்றவர்கள் வரிசையில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக இருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி. இவர் முதலில் 2015 ஆம் ஆண்டு தான் சினிமா துறைக்குள் படங்களில் இசை அமைக்க தொடங்கினார்.  

இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு இருந்தார். அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் அனிருத் அவர்கள் தான் ஹிப் ஹாப் ஆதியை “வணக்கம் சென்னை” என்ற படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க் ஸ்டார் என்ற பாட்டு மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் படுத்தினார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர் .சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

ஹிப் ஹாப் ஆதி திரைப்பயணம்:

இதனைத் தொடர்ந்து ஆதி அவர்கள் தனி ஒருவன், இமைக்கா நொடிகள், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் பாடி இருந்தார். பின் இவர் மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதனை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தற்போது இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்களும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆதி நடிக்கும் படம்:

கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் வீரன் இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவாகி இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை அடுத்து தற்போது ஆதி அவர்கள் பிடி சார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இந்த படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது.

டாக்டர் பட்டம் வாங்கிய ஆதி:

இன்னும் சில மாதங்களில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி அவர்கள் கவர்னர் கையால் டாக்டர் பட்டம் வாங்கி இருக்கும் சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஆதி அவர்கள் இசைத் துறையில் (Music Entrepreneurship) பி.ஹெச்டி முடித்து இருக்கிறார். இதனால் கோவை பாரதியார் அரசு பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர் என் ரவி கையில் இசை துறையில் என்ற பிரிவில் ஆதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹிப்ஹாப் ஆதி, நான் ஐந்து வருடம் இசை துறையில் ஆராய்ச்சி செய்தேன்.

View this post on Instagram

A post shared by News7 Tamil (@news7tamil)

கவர்னர் குறித்து ஆதி சொன்னது:

கடந்த வருடம் தான் முடிந்தேன். இந்த வருடம் டாக்டர் பட்டம் வாங்கி விட்டேன். நடித்துக் கொண்டே ஆராய்ச்சி செய்ததால் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது என்று கூறிய உடனே உடனே செய்தியாளர் ஒருவர், கவர்னர் கையில் இந்த பட்டம் வாங்கியது குறித்து சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் வருகிறது. உங்களுடைய கருத்து என்று கேட்டதற்கு கோபமகா ஆதி, டாக்டர் பட்டம் கவர்னர் கையில் தானே வாங்க வேண்டும். வேறு ஏதாவது மாற்றம் இருக்கிறதா? உங்களுடைய விருப்பம் என்ன என்று கோபமாக கேட்டிருக்கிறார். அதற்கு செய்தியாளர் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி இருந்தார். பின் சந்திராயன் 3 செய்த சாதனை இந்தியாவிற்கே பெருமை என்று கூறியிருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full