நீ ஒரு போராளி, உண்மையாக இரு தம்பி, நிகழ்ச்சியை வென்று வா - பிக் பாஸ் FJ பற்றி ஹிப்ஹாப் தமிழா ஆதி
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். கேப்டனுக்கு தனி அறை, ரூமுக்குள்ளே ஜக்குசி, ஒவ்வொரு அறையிலும் வித்தியாசமான உருவங்கள், பொருட்களை எல்லாம் வைத்து இந்த முறை வாயைப் பிளக்கும் வகையில் பிக் பாஸ் வீடு இருக்கிறது. பிரம்மாண்டமாக நேற்று பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி போட்டியாளர்களுடைய அறிமுகமும் நடைபெற்று இருந்தது.
ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றிய விவரம், டான்ஸ், கொண்டாட்டம் என்று நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.
பிக் பாஸ் 9
வீட்டுக்குள் சென்ற ஒவ்வொரு போட்டியாளர்களுமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு முதல் நாள் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் சென்று விட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக FJ கலந்து கொண்டிருக்கிறார். இவர் சுழல் சீசன் 1 என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அதோடு இவர் சிறப்பாக பீட் பாக்ஸ் செய்யக் கூடியவர். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=fzEHtF6Inyc
போட்டியாளர் FJ:
இந்நிலையில் இது தொடர்பாக இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஒரு சிறுவனாக கையில் மைக் வைத்திருந்த காலத்தில் இருந்தே எனக்கு FJவை தெரியும். அவனுடைய மிகப்பெரிய கனவு பீட்பாக்சிங் தான். அவனுடைய அண்டர் கிரவுண்ட் டிரைப்பில் பீட்பாக்சிங் பண்ணுவான். சில சமயம் ராப் பாடுவான். அவனை பார்த்தவுடனே எனக்கு, இந்த பையன் ஒரு உண்மையான போராளி என்று தோன்றியது.
ஹிப் ஹாப் ஆதி பதிவு:
ஒரு நாள் பெரிய மேடைகளில் கலக்குவான் என்ற நம்பிக்கை இருந்தது. ஒருநாள் திடீரென்று வெப் சீரிஸ் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவன் நடித்திருந்தான். நான் உடனே அவனை அழைத்து, தம்பி இது எப்போட கேட்டேன். அதற்கு அவன், அண்ணா நான் நடிகன் ஆகணும்னு சொன்னான். எப்போதும் வாழ்க்கையில் ஒரு படி மேலே போக முயற்சிக்கு உண்மையான போராளி FJ. இப்போது அவன் பிக் பாஸிற்குள் கால் வைக்கிறான். உண்மையாக இரு தம்பி. நான் உன்னிடம் பார்த்த திறமையை இந்த உலகமும் பார்க்கட்டும். வாழ்த்துக்கள், நிகழ்ச்சியை வென்று வா என்று கூறியிருக்கிறார்.