நயந்தாராவின் மாமாவாக வாய்ப்பு கொடுங்கள்.! முருகதாஸை கெஞ்சிய ஹாலிவுட் பிரபலம்.!

By Rajkumar · 14/6/2019

ஏ ஆர் முருகதாஸ் தற்போது முதன் முறையாக ரஜினியை வைத்து 'தர்பார்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக இரண்டாவது முறையாக நடிக்கிறார் நயன்தாரா. மேலும், இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

https://twitter.com/RealBillDuke/status/1139152419793674240

இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 'தர்பார்' படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்குமாறு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுடன் ஹாலிவுட் நடிகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், ஏ ஆர் முருகதாஸ் அவர்களே, எனக்கு தமிழ் பேசத் தெரியாது. இருப்பினும் ரஜினியின் அமெரிக்கவில் துளைந்து போன உறவினராகவோ , அல்லது நயன்தாராவின் மாமாவாகவோ (uncle) நடிக்க ஆசை படுகிறேன். எனக்கு அனிருத் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/ARMurugadoss/status/1139162276576059392

ஹாலிவுட் நடிகரான பில் டுயூக் இதுவரை பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், பிரிடேட்டர், எக்ஸ் மேன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பில் டுயூக்கின் இந்த டீவீட்டை கண்ட இயக்குனர் முருகதாஸ் மிகவும் ஆச்சர்யப்படத்துடன் 'இது நீங்கள் தானா' என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/RealBillDuke/status/1139228149483393024

ஹாலிவுட் பிரபலமாக முருகதாஸிடம் வாய்ப்பு கேட்டு இப்படி ஒரு ட்வீட் செய்துள்ளது. தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் பில் டுயூக்கே இப்படி பதிவிட்டாரா என்பது கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. ஆனால்,அந்த டீவீட்டை செய்தது தனது குழு தான் செய்தது என்று பில் டுயூக் உறுதிப்படுத்தியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full