நிலம் வழங்காத வட இந்தியர்களுக்கு எவ்வாறு வேலை வழங்கப்பட்டுள்ளது என என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நிலம் வழங்கிய 23 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில்  என்.எல்.சி நிறுவனம் வடஇந்தியர்களுக்கு எவ்வாறு நிலம் வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்.எல்.சி நிறுவனம்

சில நாட்களுக்கு முன் என்.எல்.சி நிறுவனம் பயிர் இடப்பட்ட நிலங்களில் கனரக வாகனங்களுடன் இறங்கி விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தனர். இதனை எதிர்த்து பாமக சார்பில் என்.எல்.சி நிறுவனம் முன்னாள் பெரிய போராட்டம் ஒன்றை நடத்தினர். அப்போராட்டத்தை போலிசார் வந்து தடுத்து களைய வைத்தனர். அதில் சிறிது வன்முறையும் ஏற்பட்டது.

Advertisement

அன்புமணி ராமதாஸ் கேள்வி

இது கூறித்து அறிக்கை வெளியிட்ட அவர் ” நிலம் அளித்த குடும்பங்களுக்கு 1990 முதல் 2012 ஆண்டு வரை 862 பெருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கபட்டுள்ளது என்றும், இது குறித்து மேலும் கூறுகையில் 2010, 2011, 2012 ஆகிய காலங்களில் 22 வட இந்தியர்களுக்கு எவ்வாறு வேலை வழங்கப்பட்டது என்றும், அதில் மிகப் பெரிய ஊழல் நடந்து இருப்பதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  வட இந்தியர்களுக்கு எதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது கூறித்து தெரிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வினா எழுப்பியதற்கு என்.எல்.சி நிருவனத்திடம் கேட்ட போது எந்த பதிலும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 ஆயிரம் குடும்பங்கள் 37256 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளது அதில் 1827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப் பட்டுள்ளதாக நாடாளுமன்றதில் கடந்த 12-12-2022 ஆண்டு கேள்வி நேரத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலளித்தார். மத்திய அரசிடம் இல்லாத செய்திகளை என்.எல்.சி நிறுவனம் எப்படி? இணையத்தில் வெளியிட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

நிலம் வழங்கிய 23 ஆயிரம் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் வேலை வாய்ப்பு வழங்காத நிலையில் எவ்வாறு வட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப் பட்டது? அது தொடர்பான செய்திகளை வழங்க மறுப்பது ஏன்? இதில் ஊழல் முறைகேடுகளும் நடந்துள்ளதா? என்பது கூறித்து மத்திய அரசு விரிவான விசாரணையை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.      

Advertisement
Advertisement