சிகிரெட் பிடிக்கும் பழக்கத்தை கமல் எப்படி விட்டார் தெரியுமா ? பேட்டி ஒன்றில் அவரே சொன்ன ஒரு சுவாரசியமான அரிய வீடியோ இதோ.
தமிழ் சினிமா உலகில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் என்றென்றும் உலக நாயகனாக கொடிக்கட்டி பறந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் வல்லமை வாய்ந்தவர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டிருக்கிறார். மேலும், விஜய் டிவியில் ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியினை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை இவருக்காக பார்ப்பது என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
தற்போது கமலஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு நிலையில் கமலஹாசன் உடைய பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் கமலஹாசனும், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் தங்களுடைய புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டது குறித்து பகிர்ந்து இருக்கிறார்கள்.
கமல் முன் சிகிரெட் பிடித்துள்ள கே எஸ் ரவிக்குமார் :
அந்த பேட்டியில் கே எஸ் ரவிக்குமார் கூறியது, நான் அவ்வை சண்முகி படத்திற்கு முன்பு முத்து படத்தை எடுத்து இருந்தேன். அப்போது இருந்து நான் எல்லோர் முன்னாடியும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போது அங்க எல்லோரும் சின்ன ஆர்டிஸ்ட் தான். அதனால் நானும் பிடிக்க ஆரம்பித்து விட்டேன். பின் அவ்வை சண்முகி சூட்டிங் நேரத்தில் என்னுடைய நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் என்னைக் கூப்பிட்டு கமல் சாருடைய படத்தை நாம் எந்தெந்த தியேட்டரில் எப்படி எல்லாம் பார்த்து ரசித்து இருக்கோம்.
கமலின் மீசையும் சிகரெட்டும் :
ஆனால், அவருடைய பட சூட்டிங்கில் நீ இப்படியெல்லாம் செய்வது சரியில்லை என்று என்னை அடிக்க வந்துவிட்டார்கள். அப்போதுதான் நான் இந்த சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டேன். நான் என்னுடைய சிகரெட் பழக்கம் விட்டதற்கு முழுக்க காரணம் கமலஹாசன் சார் தான் என்று கூறினார். பின் இவரை தொடர்ந்து கமல்ஹாசன் கூறியது, நான் சின்ன வயசிலேயே சினிமாவுக்குள் வந்தேன். அப்போது சிகரெட் பிடிக்கும் ஆரம்பத்தில் மீசையும் சிகரெட்டும் ஒன்றாக வளரும் வயது.
கமலை அதட்டியுள்ள லைட் மேன் :
https://twitter.com/chettyrajubhai/status/1475498411046572035
ஒரு நாள் நான் சிகரெட் பிடிக்கும் போது அங்கிருந்த லைட் மேன் என் சிகரெட்டை பிடுங்கி போட்டு அடி திருப்பிப் போட்டு விடுவேன். உன்னை இப்ப தான் குழந்தையாக படத்தில் பார்த்த மாதிரி இருக்கிறது. இந்த வயதில் உனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமா? என்று திட்டினார். அதற்கு பிறகு எங்குமே பிடிக்க முடியாது. சினிமாவில் நான் எல்லார் முன்னாடியும் வளர்ந்ததனால் எங்கேயும் மறைந்தும் பிடிக்க முடியவில்லை.
கழிப்பறையில் விட்ட சிகிரெட் பழக்கம் :
கழிப்பறையில் பிடிக்கலாம் என்று நினைத்தால் அங்கெல்லாம் போய் பிடிக்கனுமா? என்று அந்த பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று கூறி இருந்தார். இப்படி இவர்கள் கூறிய பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை கமல்ஹாசன் ரசிகர்கள் ட்ரெண்டிங்க் ஆக்கி வருகிறார்கள்.