சர்கார் கதை திருட்டு விவகாரம்..! வருணுக்கு அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா..!
இய்குனார் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சமீபத்தில் உதவி இயக்குனர் வருண் என்பவர்
சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என்ற புகாரின் வழக்கு இன்று முடிவுக்கு வந்தது.
பரபரப்பாக போய் கொண்டிருந்த இந்த விவகாரத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாசிற்கு பல்வேறு நெருக்கடிகள் வந்தன. இயக்குனர் வருண் ராஜேந்திரன் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு பதிவு செய்து வைத்திருந்த ‘செங்கோல்’ என்ற கதையை திருடி முருகதாஸ் ‘சர்கார்’ படத்தை எடுத்துள்ளார் என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளிக்கபட்டிருந்தது. ஆனால், இயக்குனர் முருகதாஸ் சர்கார் கதை தன்னுடைய சொந்த கதை என்றும் நடிகர் சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த கதையை உருவாக்கியுள்ளதாகவும் தொடர்ந்து கூறிவந்தார்.இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதியிடம் வருண் ராஜேந்திரனின் கதையை திருடியதை ஒப்புக்கொண்ட முருகதாஸ் அவருடன் சமாதானமான செல்வதாகக் கூறதோடு படத்தின் டைட்டில் கார்டில் ‘கதை- நன்றி வருண் ராஜேந்திரன்’ என்று போட ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார். அத்தோடு இந்த கதைக்காக வருண் ராஜேந்திரனுக்கு 30 லட்ச ரூபாய் அளிக்கபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனால், பட குழு ருண் ராஜேந்திரனுக்கு இதைப்பற்றிய அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. அதே போல கதை உரிமையை வேற்றுமொழிக்கு விற்க வருண் ராஜேந்திரனுக்கு பெருந்தொகையைக் கொடுக்கவேண்டிவரும் என்றும் கூறப்படுகிறது.#VarunRajendran says he is dedicating his #Sengol (aka) #Sarkar story to @actorvijay & his fans. He meets the press along with veteran K.Bhagyaraj. @imKBRshanthnu pic.twitter.com/5gdDZU3TTa
— |Trending?Talks™| (@Trending_Hypers) October 30, 2018