புஷ்பா 2 படத்தால் ரசிகைக்கு நேர்ந்த நிலைமை, அல்லு அர்ஜுனுக்கு எதிராக புகார்- முழு விவரம் இதோ

By subhashini · 6/12/2024

நடிகர் அல்லு அர்ஜுன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்து இருக்கின்றது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த புஸ்பா படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது.

இயக்குனர் சுகுமார் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார் . இந்த படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார்கள். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. தற்போது இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் வெளியாகி இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியாகி இருக்கும் புஷ்பா 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

புஷ்பா 2 படம்:

அதுமட்டுமில்லாமல் புஷ்பா 2 படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, புஷ்பா 2 படம் வெளியாகுவதற்கு முன்பு பிரீமியர் ஷோ ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் போடப்பட்டிருந்தது. அந்த தியேட்டருக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன் திடீரென்று சென்றிருந்தார்கள்.

அல்லு அர்ஜுன் மீது புகார்:

இதனால் உற்சாகத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு போலீஸால் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்த கூட்ட நெரிசலில் 39 வயது உடைய ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அது மட்டும் இல்லாமல் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட அவருடைய மகனுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் மட்டும் இல்லாமல் இன்னும் சில பேர் கூட்ட நெரிசலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காவல்துறை அதிகாரி பேட்டி:

இந்த நிலையில் ஹைதராபாத் காவல் துறை, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவருடைய பாதுகாப்பு குழுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக அளித்த பேட்டியில் காவல்துறை அதிகாரி, நடிகர் அல்லு அர்ஜுனும் இசையமைப்பாளரும் தியேட்டருக்கு வருவார்கள் என்று எங்களுக்கு யாருக்குமே தெரியாது. எந்த தகவலும் சொல்லவில்லை. அதனால் தான் அந்த கூட்டத்தை சமாளிக்க ரொம்பவே சிரமமாக இருந்தது. இதில் ஒருவர் இறந்திருக்கிறார்.

வழக்குப்பதிவு:

சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழப்பமான சூழலுக்கு காரணமான நடிகர் அல்லு அர்ஜுன், அவருடைய பாதுகாப்பு குழுவினர் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 105, 118(1) (அபாயகரமான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full