விஜய்க்கு அம்மாவாக நடிக்க கூட நான் தயார். ஓப்பனாக சொன்ன நடிகை வீடியோ.

By subhashini · 2/3/2020

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் படத்தை பிரிட்டோ தயாரித்து வருகிறது.

வீடியோவில் 11:05 நிமிடத்தில் பார்க்கவும் .

https://youtu.be/ktPrY3Sq7ks

இந்நிலையில் விஜய் உடன் சேர்ந்து படத்தில் நடிக்க பல பிரபலங்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இவருடன் படத்தில் அம்மா கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க தயார் என்று நடிகை பானு அவர்கள் பேட்டியில் கூறி உள்ளார். நடிகை பானு அவர்கள் பல சீரியல்களில் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் விக்ரம் அவர்களின் நடிப்பில் வந்த ஸ்கெட்ச் படத்திலும், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சிந்துபாத் படத்திலும் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பானு அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.

அதில் அவர் கூறியது, எனக்கு விஜய் சேதுபதி அவர்களுடன் படத்தில் நடிக்கப் போகிறேன் என்று சொல்லும் போது முதன் முதலில் பயமாக இருந்தது. நான் நிறைய டேக் வாங்கி கொண்டு இருந்தேன். அப்போது விஜய் சேதுபதி அவர்கள் என்னிடம் வந்து நீ சிவாஜி சார் மாதிரி எல்லாம் நடிக்க வேண்டாம். உனக்கு என்ன வருமோ அதை செய் என்று அவர் சொன்னார். அது என்னால் இன்னமும் மறக்க முடியாது. அதோடு எதார்த்தமாக நடிப்பது தான் இன்றைய சினிமா என்றும், சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்றும் சொன்னார். அவர் கூட நடிக்கும் சக நடிகர்களுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்.

அவருடைய அழகு கேத்த அடக்கமும் அவரிடம் உள்ளது. நான் அவரிடம் தான் கற்றுக் கொண்டேன். மேலும், நான் இளைய தளபதி விஜய் ஓட பெரிய ரசிகை. சின்ன வயதில் இருந்தே அவரை பார்க்கணும், அவருடன் பேசணும், நடிக்கணும் என்று எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அவருடைய படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடத்தால் கூட போதும். கதாநாயகினா ஒரு லிமிட்குள்ள இருக்கனும். ஆனால், அம்மா அந்த மாதிரி இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை என்று கூறினார்.

behindtalkies AMP · Quick view
View full