வயிற்று வலியின் காரணமாக அப்போது அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை - கார்ல்சன்.

By Dhilip Kumar · 23/8/2023

நான் வயிற்று வலியின் காரணமாக அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று செஸ் கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் கூறியுள்ளார். தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் FIDE உலக சதுரங்க போட்டியானது உலக செஸ் போட்டிகளில் அனைவரது கண்களையும் தமிழ் நாட்டின் பக்கம் திருப்ப வைத்தவர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. அஜர்பைஜானில் தற்போது நடைபெற்று வரும் உலக செஸ் தொடரில் இறுதிப்போட்டியில் கிரான்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள உள்ளார்.

அவர் இதற்க்கு முன்னதாக உலக தரவரிசை பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்த அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானா-வை அரையிறுதியில் வீழ்த்தி இன்று மாலை 4 மணிக்கு மேக்னஸ் கார்ல்சனை இறுதிச் சுற்றில் மோதவுள்ளார். இறுதிபோட்டியின் முதல் சுற்று நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய நிலையில் அப்போட்டியனது மாலை 7 மணிக்கு 35 நகர்வுக்கு பின் இருவரும் ஒப்புக்கொண்டு சமன் செய்தார். முதல் சுற்று சமனில் முடிந்ததால் இன்று நடக்கவிருக்கும் 2 ஆம் சுற்றில் யார் வெற்றி பெருவரோ அவருக்கே சாம்பியன் பட்டம் வழங்கப்படுள்ளது.

பிரக்னந்தா வெற்றி பெற வேண்டும் இந்திய முழுவதும் ஆவலுடன் இருந்து வருகின்றனர். 2022 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இணையதளப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இதன் மூலம் கார்ல்சனை வீழ்த்திய 3-வது இந்திய வீரராக மாறினார் பிரக்ஞானந்தா. அதனைத் தொடர்ந்து FTX கிரிப்டோ கோப்பை 2022-ல், 3-வது முறையாக கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வென்றார்.

நேற்றைய போட்டியில் வெள்ளை நிற காய்களை கொண்டு களமிறங்கிய பிரக்ஞானந்தா, நேற்றைய போட்டியில் சற்று முன்னிலையில் இருந்து வந்தார். 35 வது நகர்வுக்கு பின் போட்டி கடினமாக்க விரும்பாத இருவரும் ஒப்புக்கொண்டு சமன் செய்தனர். இது கூறித்து மேக்னஸ் கார்ல்சன்“நான் போட்டியில் ஏதாவது ஒன்று செய்திருக்க  வேண்டும் என்று நினைத்தேன். நான் அந்த போட்டியில் விளையாடியது எனது சிறந்த முயற்சி அல்ல, அதே சமையம் நான் அந்த இடத்தில் எந்த தவறுகளையும் செய்ததாக தோன்றவில்லை” என்றார்.

அவர் மேலும் கூறுகையில் அபாசோவுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு, நான் அருந்திய உணவு எனக்கு  ஒத்துப்போகாததால் வயிற்று பிரச்னை ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக என்னால் சாப்பிட முடியவில்லை. நான் அமைதியாக இருந்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்றார். மேலும் கூறுகையில்  “நான் ஓய்வு எடுத்த பின்பு இன்று  புத்துணர்ச்சியாக இருந்து வருகிறேன். என்னால் முடிந்ததை நான் நிச்சயம் செய்வேன்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

சாம்பியன் பட்டம் வெல்லும் நபருக்கு 1,10,000 அமெரிக்கா டாலர்கள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 91 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் நபருக்கு $80,000 அமெரிக்கா டாலர்கள், இந்திய மதிப்பில் 66 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். பிரக்னந்தா வெற்றி பெற வேண்டும் இந்திய முழுவதும் ஆவலுடன் இருந்து வருகின்றனர்

Tamil Behind Talkies AMP · Quick view
View full