தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவர் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, ரௌத்திரம், நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது நடிகர் ஜீவா அவர்கள் 83 என்ற படத்தில் நடித்து உள்ளார். தற்போது ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படம் “சீறு”. இந்த படத்திற்கு இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ் அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

Advertisement

இந்த நிலையில் இந்த படம் குறித்து நடிகர் ஜீவா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் சிவா மனசுல சக்தி போன்ற ஜாலியான படங்கள் எப்ப பண்ணுவீங்க என்றும், அதே போல கற்றது தமிழ், ரௌத்திரம் பழகு, ராம் போன்ற படங்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என்று உங்களை ரசிகர் சமூகவலைத்தளங்களில் கேட்கிறார்கள். இதுகுறித்து நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு நடிகர் ஜீவா அவர்கள் கூறிய, கற்றது தமிழ், ராம் படங்கள் ரிலீசாகும் போது பல பிரச்சனைகள் வந்தது. கற்றது தமிழ் மாதிரி எந்த ஒரு படமும் இனி நான் பண்ணமாட்டேன். அந்த படம் பார்க்கும்போது பயங்கரமாக மன அழுத்தத்தை தரும்.

இப்போது பார்க்கும் போது கூட ஏதோ ஒரு வகையில் மனக் கஷ்டங்கள் ஏற்படுகிறது. சினிமாவைப் பொருத்தவரை படங்களில் நெகட்டிவ் கதை இருந்தாலும் கடைசியில் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்று தான் படங்கள் எடுக்கிறார்கள். ஆனால், கற்றது தமிழ் படம் பலருக்கு நெகட்டிவாகவும், பலருக்கு பாசிட்டிவாகவும் இருந்தது. தற்போது வரை இந்த படம் குறித்து கேள்வியாகவே இருந்து வருகிறது. சிவா மனசுல சக்தி படம் பார்த்தீங்கனா, அது ஒரு ஜாலியான பையனோட கதாபாத்திரம். அந்த காலத்திற்கு ஏற்றார் போல் அதுவும் என்னுடைய வயதுக்கேற்றார் போல அந்த படத்தை பண்ணி இருந்தேன். அதற்கு பிறகு நான் நிறைய படங்கள் பண்ணி இருக்கிறேன்.

Advertisement

Advertisement

மீண்டும் அந்த மாதிரி படங்கள் பண்ண வேண்டும் என்றால் என்னுடைய இயக்குனர் தான் சொல்ல வேண்டும். ஒரு சமயத்தில் எனக்கு இரண்டு மூன்று வருடங்கள் ஒரு சின்ன இடைவெளி வந்து விட்டது. அதற்கு பிறகு திருநாள் என்ற படம் பண்ணினேன். இந்தப்படமும் பெரிய அளவு வெற்றியை கொடுக்கவில்லை. சமீபகாலமாக நான் படங்களில் அதிக கவனம் செலுத்தி தேடித்தேடி நடித்து வருகிறேன். நான் முன்பு போல இல்லாமல் வித்தியாசமான படங்களில் தான் நடித்து கொண்டு இருக்கிறேன். ஆனால், அது யாரும் வெளிச்சம் போட்டு காட்டி மாட்டுகிறார்கள். அந்தப்படம் மக்களுக்கு ரசிக்கும் சூழ்நிலைகள் எனக்கு அமையவில்லை. இதனால் தான் என்னுடைய படங்கள் தோல்வியடைந்து விட்டது. தற்போது நான் சீறு, 83 என்று இரண்டு படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

Advertisement