தொடர்ந்து செய்து வரும் நிதியுதவியில் பணமே இல்லை - ஆனாலும் , இப்படி உதவி செய்வேன் - பிரகாஷ் ராஜ்
சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி கோர அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவினால் உலகமே கதிகலங்கி போய் உள்ளது. கொரோனாவில் இருந்து தப்பிக்க உலகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நாடு முழுவதும் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார்.
இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள், காவல்துறை, தூய்மை பணியாளர்கள் என பல பேர் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.
இந்த இக்கட்டான சூழலில் நாடு முழுவதும் தற்போது உணவு தட்டுப்பாடு பிரச்சினை எழுந்துள்ளது. இந்தப் பிரச்சினையை நீக்குவதற்கு சமூக ஆர்வலர்களும், நடிகர், நடிகைகளும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். மேலும், பல பிரபலங்கள் கோடிக்கணக்கான அளவில் நிதி கொடுத்து உதவி செய்து உள்ளார்கள்.
https://twitter.com/prakashraaj/status/1252108342408994816
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறக்கட்டளை மூலம் பண உதவி செய்து உள்ளார். பின் அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி வருகிறார்.
மேலும், இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, தற்போது என்னிடம் நிதி குறைவாக உள்ளது. இருந்தாலும் நான் கடன் வாங்கியாவது தொடர்ந்து சமூகப் பணிகளைச் செய்வேன். ஏன் என்றால் என்னால் மறுபடியும் சம்பாதிக்க முடியும். கொரோனாவால் நிறைய ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
https://twitter.com/prakashraaj/status/1249163142392958978
இந்த இக்கட்டான சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். கூடிய விரைவில் இந்த நிலைமை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனாவை எதிர்த்துப் போராடி ஒழிப்போம். அரசாங்கம் சொல்லும் அறிவுரைகள் படி நடப்போம் என்று கூறியுள்ளார். இப்படி இவர் டுவிட்டரில் பதிவிட்ட கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த செயலைப் பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ் , தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சினிமா துறையில் தனக்கென்று ஒரு சிறந்த பெயரை பெற்றவர். இவர் நடிப்பையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்டவர்.