அந்த காட்சியில் நான் நடித்திருக்கவே கூடாது என்று நடிகை சதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சதா. இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். தமிழில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ என்ற படம் மூலம் தான் கதாநாயகியாக சதா அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதன் பின்னர் இவர் எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவரால் முன்னணி நடிகையாக தொடர முடியவில்லை.

Advertisement

சதாவின் திரைப்பயணம்:

அதோடு பல புது முக நாயகிகளின் வருகையால் சதா பட வாய்ப்பை இழந்தார். சதா கடைசியாக வடிவேலு நடித்த ‘எலி ‘ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு இடையில் எதிர் பார்த்த அளவு பட வாய்ப்புகள் இல்லாததால் சதா அவர்கள் தி ஜூனியர்ஸ், ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பங்குபெற்றார். ஆனால், அங்கும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை.

சதா நடித்த கடைசி படம்:

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாவில் சதா ரீ-என்ட்ரி கொடுத்தார். இறுதியாக நடிகை சதா அவர்கள் இயக்குனர் மஜித் இயக்கிய ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் நடித்திருந்தார். தன்னுடைய கணவனை காப்பாற்ற மனைவி பாலியல் தொழிலாளியாக மாறுகிறார். குணமாகி வந்த கணவர் தன்னுடைய மனைவியை ஏற்க மறுக்கிறார். அதற்கு பிறகு அவர் என்ன ஆனார்? என்பதே படத்தின் கதை. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

Advertisement

சதா நடத்திய ஹோட்டல்:

அது மட்டும் இல்லாமல் படம் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இதற்குப் பிறகு சதாவிற்கு பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனது. இதனால் இவர் தன்னுடைய திரையுலகில் சம்பாதித்த மொத்த பணத்தையும் பிசினஸில் போட்டார். இவர் மும்பையில் ஹோட்டல் ஒன்றை துவங்கி இருந்தார். அந்த ஹோட்டல் எர்த்லிங்ஸ் கபே என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த ஹோட்டல் நான்கு வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. இந்த ஓட்டல் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த நிலையில் இடத்தினுடைய உரிமையாளர் இடத்தை காலி செய்ய சொல்லி இருக்கிறார்.

Advertisement

சதா அளித்த பேட்டி:

இதனால் சதா மனம் உடைந்து விட்டார். தற்போது மீண்டும் சதா படங்களில் கவனம் செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சதா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், தேஜா படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்தேன்.அதை நினைத்தால் இப்போதும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னுடைய கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று நான் இயக்குன இடம் சொன்னேன். ஆனால், படத்தில் இந்த காட்சி வேண்டும் என்று சொல்லி என்னை கட்டாய படுத்தி நடிக்க வைத்தார்கள். அந்த காட்சி எடுத்த பின் வீட்டுக்கு சென்று அழுதேன் என்று கூறியிருக்கிறார் கூறியிருந்தார்.

Advertisement