இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் மார்ச் 6 ஆம் தேதி வெளியான ஜிப்ஸி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக ஜீவாவும், கதாநாயகியாக நடாஷா சிங் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து உள்ளார். இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படம் மத அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. சாதி,மதம் கலவரங்களால் நடக்கும் பிரச்சனை தான் ஜிப்ஸி படம்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த நடாஷா சிங் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி இருந்தார். நடாஷா சிங் அவர்கள் இன்ஜினியரிங் படிப்பை படித்து இருக்கிறார். இவருக்கு சினிமாவில் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக மாடலிங் செய்ய தொடங்கினார்.

Advertisement

இதையும் பாருங்க : பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்த நடிகையா இது. திருமணம் வேறு ஆகிடுச்சாம்.

Advertisement

இவர் 2015 மிஸ் இமாசல் என்ற பட்டம் வாங்கினார். 2016 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியாவில் டாப் 10 பேர்களில் ஒரு ஆளாக வந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு தமிழில் ஜிப்ஸி என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகை நடாஷா சிங் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Advertisement

வீடியோவில் 7 : 45 நிமிடத்தில் பார்க்கவும்

அதில் அவர் தனுஷ், விஜய் குறித்து பேசியிருக்கிறார். இவர்கள் இருவரைப் பற்றி பல நடிகர்கள் பேட்டிகளில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் ஜீப்சி படத்தின் கதாநாயகி அவர்கள் பேட்டியில் கூறியிருப்பது, நான் ஜீவாவோட படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். ஜிப்ஸி படத்தில் எனக்கு ஜீவா நிறைய உதவி செய்திருக்கிறார்.

படத்தின் டயலாக் எல்லாம் அவரை சொல்லித் தந்தார். எப்படி எமோஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று கூட எனக்கு சொல்லி தந்தார். எனக்கு தனுஷ் மற்றும் தளபதி படத்தில் நடிக்க ரொம்ப ஆசை. நடிகர் தனுஷுடன் எனக்கு பேட்டிங் செய்ய வேண்டும் என்ற ஆசை. அதே போல் தளபதி விஜய்யை திருமணம் செய்ய வேண்டும். நீங்கள் யாரை கிஸ் பண்ண நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் நடிகர் ஜீவாவை தான் என்று வெளிப்படையாகக் கூறினார். இவர் இப்படிக் கூறிய கருத்து சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : கொரோனா பாதிப்பை தடுக்க உதவும் உணவுகள். சத்யராஜ் மகள் எப்படி இதெல்லாம் சொல்றார்னு கேக்குறீங்களா?

தனுஷ் மற்றும் தளபதி விஜய் இருவருமே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்கள். இவர்கள் இருவருமே தற்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகின்றனர். தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் எல்லாரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement