விஜயின் தீவிர ரசிகை நான், அவருடன் படத்தில் நடித்து டூயட் பாட ஆசை! - சொன்னது யார்?

By Ajju · 9/11/2017
சினிமாவில் டாப் நடிகர்ளுடன் எப்படியாவது நடித்து விடவேண்டும் என நினைப்பது நடிகைகளுக்கு வாடிக்கையான ஒன்று தான். அதுவும் விஜய் போன்ற நடிகருடன் நடித்தால் அவர்களது நடிப்பின் வேலையே முடிந்துவிவது ஃபீல் ஆகி விடுவார்கள். அதே போல் தான் தற்போது கவண் படத்தில் துணை நாயகியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கும் ஆசை வந்துள்ளது.தற்போது திருப்பதி சாமி குடும்பத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் கூடியதாவது: இந்த ஹீரோயின் வாய்ப்பிற்கு காரணம் விஜய் சேதுபதி தான். கவண் படத்தில் சின்ன ரோல் என்றாலும் அவர் நிறைய கற்றுக்கொடுத்துள்ளார். நல்ல சிறந்த நடிகையாக வர வேண்டும் என்பது அவரது விருப்பம். இன்னும் நிறைய அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நான் ஒரு தளபதி விஜயின் தீவிர ரசிகை. எப்படியாவது எதிர்காலத்தில் அவருடன் நடித்து டூயட் பாடி விட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை, எனக் கூறினார் ஐஸ்வர்யா லட்சுமி.
Tamil Behind Talkies AMP · Quick view
View full