TRP யை சம்பாதித்து கொடுத்த சூப்பர் ஹிட் சீரியலை நிறுத்தும் கலர்ஸ் தமிழ். ரசிகர்கள் வருத்தம்.

By subhashini · 24/4/2022

திடீரென கலர்ஸ் தமிழ் இதயத்தை திருடாதே 2 சீரியல் விரைவில் முடியப்போவதாக அறிவித்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் சீரியல் இதயத்தை திருடாதே. இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் நவீன் – ஹீமா பிந்து. இந்த சீரியல் தொடங்கிய காலத்தில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

அதனால் தான் இதயத்தை திருடாதே சீரியல் முடிந்தவுடன் இதயத்தை திருடாதே 2 தொடங்கி இருக்கிறார்கள். இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது. மேலும், இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நவீன் சின்னத்திரை வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் தான் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன் பின் தமிழில் மசாலா படம், பூலோகம், பின் மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதயத்தை திருடாதே சீரியல்:

அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது இவர் இதயத்தை திருடாதே சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனும், சகானா என்ற கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த தொடரின் மூலம் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூக வலைதளப் பக்கங்களில் இந்த ஜோடி குறித்த கருத்துக்கள் தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

நவீன்-கண்மணி திருமணம்:

மேலும், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், நவீனும்- பிந்துவும் நாங்கள் நண்பர்கள் தான் என்று கூறிவிட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நவீனுக்கும் சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் திருமணம் ஆக போகிறது என்ற தகவல் வெளியானது. இது இதயத்தை திருடாதே ரசிகர்களுக்கு செம்ம ஷாக்கிங்காக இருந்தது. மேலும், இவர்களது காதல் திருமணம் இல்லை என்றும், பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

கண்மணி- நவீன் திருமண நிச்சயதார்தம் :

நவீன் குடும்பமும், கண்மணி குடும்பமும் நீண்ட கால நண்பர்களாம். நிச்சயிக்கப்பட்ட பின் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்தி இருக்கின்றன. அதோடு இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையுமே அவரவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் கண்மணி- நவீன் ஜோடி குறித்து நிறைய பாசிட்டிவ், நெகட்டிவ் கமெண்ட்ஸ் எல்லாம் வந்தவண்ணம் இருக்கின்றன. மேலும், கடந்த வாரம் தான் சென்னையில் உள்ள விஜயாபார்க்கில் இவர்களின் திருமண நிச்சயதார்தம் நடைபெற்று இருக்கிறது.

முடிவுக்கு வரும் இதயத்தை திருடாதே சீரியல்:

இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் படு வைரலாகியுள்ளது. இதை பார்த்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இவர்களுடைய திருமணம் ஜூன் மாதம் நடைபெற இருப்பதாகவும் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இதயத்தை திருடாதே சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுவும் நவீன்- கண்மணி நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இதயத்தை திருடாதே சீரியல் முடிவடைகிறது என்ற செய்தி வெளியானது சீரியல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அதற்கான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full