இதயத்தை திருடாதேவை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம் - கேக் வெட்டி, பிரியாவிடை அளித்த சீரியல் குழுவினர்.

By Rajkumar · 6/5/2022

இதயத்தை திருடாதே சீரியலில் இருந்து குட்டி பிரபலம் ஒருவர் வெளியேறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் சீரியல் இதயத்தை திருடாதே. இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கலர்ஸ் மராத்தியில் ஹிட்டான ஜிவ் ஜலா ஏடே பிசா சீரியலின் ரீமேக் தான் இதயத்தை திருடாதே. அரசியல் ஆதாயங்களுக்காக `கல்யாணம்' என்ற பெயரில் இருவரின் வாழ்க்கை பகடைக்காயாக்கப்படும் கதை தான் இதயத்தை திருடாதே. பின் இதயத்தை திருடாதே சீரியல் முடிக்கப்பட்டு அதே நடிகர்களுடன் இதயத்தை திருடாதே சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் நவீன் – பிந்து. நடிகர் நவீன் சின்னத்திரை வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் தான் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன் பின் தமிழில் மசாலா படம், பூலோகம், பின் மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது இவர் நடித்து வரும் இதயத்தை திருடாதே சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்.

இதயத்தை திருடாதே சீரியல்:

கலர்ஸ் தமிழில் டிஆர்பியில் டாப் ரேட்டிங்கில் ஒன்றாக இதயத்தை திருடாதே இருக்கிறது. இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனும், சகானா என்ற கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து வருகிறார்கள். மேலும், சமூக வலைதளப் பக்கங்களில் இந்த ஜோடி குறித்த வீடியோக்கள் தான் அதிகம் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், நவீனும்- பிந்துவும் நாங்கள் நண்பர்கள் தான் என்று கூறி இருந்தார்கள்.

நவீன்-கண்மணி திருமணம்:

சமீபத்தில் நவீனுக்கும் சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் திருமணம் ஆக போகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது. இது இதயத்தை திருடாதே ரசிகர்களுக்கு செம்ம ஷாக்கிங்காக இருந்தது. மேலும், இவர்களது காதல் திருமணம் இல்லை என்றும், பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் தான் சென்னையில் உள்ள விஜயாபார்க்கில் இவர்களின் திருமண நிச்சயதார்தம் நடைபெற்று இருந்தது. இதனை அடுத்து இந்த சீரியல் கூடிய விரைவில் முடிய போகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது.

சீரியலில் விலகிய முக்கிய பிரபலம்:

இந்நிலையில் சீரியலில் இருந்து முக்கிய பிரபலம் விலகி உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சீரியலில் சிவா - சஹானா ஆகிய இருவரின் குழந்தையாக ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக ஆழியா நடித்து வருகிறார். ஆழியாவின் சுட்டித்தனமான நடிப்பு பலரையும் கவர்ந்து இருக்கிறது. அதிலும் சீரியலில் ஆழியா வரும் காட்சிகள் எல்லாம் களைகட்டும். இந்நிலையில் இதயத்தை திருடாதே சீரியல் ரசிகர்களுக்கு வருத்தமான ஒரு செய்தி என்னவென்றால், குழந்தை ஆழியா இந்த சீரியலை விட்டு விலகுகிறார். இதயத்தை திருடாதே சீரியலில் ஆழியாவின் காட்சிகள் அனைத்தும் ஷூட்செய்து முடிக்கப்பட்டு விட்டது.

ஆழியா பற்றிய தகவல்:

மேலும், ஆழியாவின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது மொத்த சீரியல் குழுவினர் சேர்ந்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து பிரியா விடை அளித்து இருக்கின்றனர். இது தொடர்பான போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், ஐஷு-வை நாங்கள் அனைவரும் மிஸ் செய்ய உள்ளோம் என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆழியாவுக்கு 8 வயது தான் ஆகிறது. சன் டிவி-யில் ஒளிபரப்பான நாயகி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தனது கியூட் எக்ஸ்பிரஷன் மற்றும் அழகான பேச்சு, இயல்பான நடிப்பால் பல டிவி ரசிகர்களை ஈர்த்து உள்ளார். மேலும், இவர் ஒரு சில வெப் சீரிஸ்கள் மற்றும் சில ஷார்ட் ஃபிலிம்களிலும் நடித்து இருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full